search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சியாச்சின் பனிமலை"

    • உலகிலேயே உயரமான் போர் பகுதியாக் சியாச்சின் கருதப்படுகிறது
    • 15,200 அடி உயரத்தில் மருத்துவ பணியில் நியமிக்கப்பட்டதை இந்திய ராணுவம் தெரிவித்தது

    இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோட்டிற்கு அருகே உள்ளது மிக அதிக உயரமுடைய செங்குத்தான பனிமலைகளை உள்ளடக்கிய சியாச்சின் பனிமலைப்பகுதி.

    இந்தியாவிலேயே மிக பெரியதும், உலகின் இரண்டாவது மிக பெரிய பனிமலைப்பகுதியான இங்கு இந்திய ராணுவத்தில் சிறப்பான பயிற்சி பெற்ற வீரர்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகிலேயே உயரமான போர் பகுதியாகவும் இது கருதப்படுகிறது.

    இப்பகுதியில் முதல் பெண் மருத்துவ அதிகாரியாக "சியாச்சின் போராளிகள்" (Siachen Warriors) குழுவை சேர்ந்த கேப்டன் ஃபாத்திமா வாசிம் நியமிக்கப்பட்டார்.

    "கடுங்குளிருடன் மிக கடினமான வானிலையில் பணியாற்ற தேவையான தீவிர பயிற்சிகளை சியாச்சின் போர்  பயிற்சி பள்ளியில் (Siachen Battle School) கேப்டன் ஃபாத்திமா வாசிம் வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து 15,200 அடி உயரத்தில் பணிக்காக நியமிக்கப்பட்டார். அவரது மனந்தளராத முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் இது சரியான எடுத்துக்காட்டு" என இந்திய ராணுவத்தின் ஃபைர் அண்ட் ஃப்யூரி கோர் (Fire and Fury Corps) தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

    கடல் எல்லைக்கு மேல் 12,000 அடி உயரத்தில் பர்தாபூர் எனும் இடத்தில் உள்ளது சியாச்சின் அடிப்படை முகாம் (Siachen Base Camp). சாதாரண தினங்களில் மைனஸ் 86 டிகிரி சென்டிகிரேடு (- 86 degree centigrade) என குளிர்நிலை நிலவி வரும் இங்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பனிப்புயல்கள் தாக்குவது வழக்கமான ஒன்று.

    இங்குள்ள சியாச்சின் போர் பள்ளியில்தான் கடுமையான பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் கேப்டன் ஃபாத்திமா வாசிம்.

    ×