search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்த மருத்துவத்தில் சோரியாசிஸ்"

    • உடலின் வெளித்தோல் 27 நாட்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டிருக்கும்.
    • செதில் உதிர்ந்த இடங்களில் ரத்தக்கசிவும் காணப்படும்.

    சோரியாசிஸ் என்பது ஆட்டோ இம்யூன் நோய் வகையைச் சார்ந்தது. அதாவது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே, நம் உடலின் செல்களுக்கு எதிராக செயல்படுவதால் வருகின்ற நோயாகும். சாதாரணமாக நம் உடலின் வெளித்தோல் அடுக்கு சராசரியாக 27 நாட்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டிருக்கும்.

    ஆனால் சோரியாஸிஸ் நோயில் தோலின் வெளி அடுக்கு அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும். இதனால் தோல் செதில்களாய் உதிர்ந்து கொண்டிருக்கும். செதில் உதிர்ந்த இடங்களில் சில நேரம் சிறு ரத்தக்கசிவும் காணப்படும்.

     பெரும்பாலும் வட்ட வடிவில் படை போன்று காணப்படும் இந்த நோய் சித்த மருத்துவத்தில் செதில் உதிர் நோய் அல்லது காளாஞ்சகப்படை என்று அழைக்கப்படுகிறது.

    இதுபெரும்பாலும் தலை, நெற்றி, காது, காதின் பின்புறம், கை முழங்கையின் பின்புறம், முதுகு, தொடை போன்ற இடங்களிலும், ஒரு சிலருக்கு உள்ளங்கை, உள்ளங்கால்களிலும் வருகிறது.

    இந்நோய் உடலின் வெளித்தோலை பாதிப்படையச் செய்வதால், மனதில் கவலையை ஏற்படுத்துகிறது. இதற்கான சித்த மருத்துவம்:

    1) வெட்பாலை தைலம்:

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த தைலத்தை தேய்த்து வர வேண்டும். ஒன்று முதல் இரண்டு சொட்டு உள்ளுக்கும் சாப்பிட வேண்டும்.

    2) பறங்கிப் பட்டை:

    ரசாயனம் 1 கிராம் வீதம் காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.

    3) கந்தக ரசாயனம்:

    1 கிராம் அல்லது கந்தக மெழுகு 500 மி.கி. வீதம் காலை, இரவு இரண்டு வேளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.

    4) அமுக்கரா மாத்திரை:

    காலை 2. இரவு 2 வீதம் சாப்பிட வேண்டும்.

    5) நலுங்குமா:

    சந்தனம், வெட்டி வேர், கோரைக்கிழங்கு, பாசிப்பயறு, கிச்சிலிக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சை வேர் இவைகளை பொடி செய்து இந்த பொடியைத் தேய்த்து குளிக்க வேண்டும்.

     6) வைட்டமின் டி:

    இந்நோயால் தோலின் வெளி அடுக்கு பாதிக்கப்படுவதால் வைட்டமின் டி-யை தோலினால் சூரிய ஒளியில் இருந்து பெற முடியாது. ஆகவே வைட்டமின் டி குறையாமல் இருக்க பால், தயிர், பாலாடைக்கட்டி, பீட்ரூட், கேரட். எள், முருங்கைக்காய், முட்டைகோஸ், பிரக்கோலி, திராட்சை,மாதுளை, அத்திப்பழம், அவகோடா, முட்டை, ஆட்டிறைச்சி, கீரைகளில் வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, அறுகீரை, பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

     7) மனக்கவலை படுவதினால் சோரியாஸிஸ் நோய் வருவதில்லை. ஆனால் சோரியாஸிஸ் நோய் வந்தவர்கள் கவலை இல்லாமல் வாழ பழகிக்கொள்ள வேண்டும். ஏனெனில் மனக்கவலை இந்நோயை அதிகப்படுத்தும்.

    ×