search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதைந்து போன சாலை"

    • நடந்து செல்லும் பொது மக்கள் சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள பள்ளத்தால் முகம் சுழித்து மன வேதனைஅடைகின்றனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு நோய்வாய் ஏற்படும் வாய்ப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது

    கடலூர்:

    தமிழகத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மையான திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் உள்ளது. இதுதவிர திருப்பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலும் இங்கு உள்ளது.இப்படிப்பட்ட அற்புத ஸ்தலங்களால் அமையப் பெற்றது கடலூர் மாவட்டம். மேலும் கடலூர் மாநகராட்சியாக மாற்றப்பட்டு பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அதிகாரி களால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.   மேலும் கடலூரில் சில்வர் பீச், பெரிய மால் எண்ணிலடங்காத சிறிய மற்றும் பெரிய அளவிலான விலை குறைந்த விலை அதிகமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வேறு எந்த பகுதியை காட்டிலும் கடலூர் மாவட்டம் முதன்மையாக உள்ளது. மேலும் விழுப்புரம், திண்டிவனம், சென்னை, திருவண்ணாமலை, விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடலூர் மாவட்டம் வழியாகத்தான் செல்ல முடியும். மேலும் கடலூர் துறைமுக பகுதி, தேவனாம்பட்டினம் பல்வேறு மீனவ குடும்பங்க ளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

    இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் சாலைகளில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்கள் சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள பள்ளத்தால் முகம் சுழித்து மன வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக கடலூரில் இருந்து முதுநகர் மற்றும் கடலூரில் இருந்து புதுவை மாநிலத்திற்கு செல்லக்கூடிய சாலை மிக மோசமாக நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை மிகவும் சேதம் அடைந்து பெரும் பள்ளங்களாக உள்ளதால் அதில் செல்லக்கூடிய வாகனங்களால் சிறிது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  மேலும் சாலையிலிருந்து வரும் புகையினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நோய்வாய் ஏற்படும் வாய்ப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் பள்ளத்தினால் வாகனங்களும் பெரிதும் சேதமடைகிறது  நீண்ட நாட்களாக சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் வேதனை அளிக்கிறது. எனவே அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி சாலைகளில் உள்ள குண்டு குழியுமாக உள்ள பெரிய பள்ளங்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுகின்றனர்.

    ×