search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதைந்த சாலை"

    • கடலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவசர காலங்களில் 108 ஆம்பு லன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழனியாண்டவர் நகர்உள்ளது. இந்த நகரில் அரசு அதி காரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பழனி ஆண்டவர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதி சரிவர இல்லாமல் குண்டும் குழியுமாக பொது மக்களின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்த முடியாத அள வில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மோட்டார் சைக்கில் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் பாதிப்படைகின்றனர். மேலும் இந்த பஞ்சரான சாலையினால் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.

    இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் சரிவர பராமரிக்கவில்லை இத னால் மழைக்காலங்களில் மழை நீர் கழிவுநீர் கால்வாயில் தேங்கி சாலையில் பெருக் கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த கழிவுநீரில் தேங்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ளவர் களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்கள் கால்வாயில் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் அந்த பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசி அங்குள்ளவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்படுகிறது. மேலும் ஒரு சிலர் இந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இந்த சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளினால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    ×