search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பவங்கள்"

    • அரசு மருத்து வமனையில் தொடர்ந்து மர்ம நபர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
    • இரவு நேரங்களில் மருத்துவமனை வார்டுக்குள் யார் வருகி றார்கள்?, யார் போகி றார்கள்? என்பது தெரியாமல் உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வெளி மற்றும் உள் நோயா ளிகளாக தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிதடி தகராறில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இருந்த பகுதிக்கு, இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை மிரட்டி சென்றனர்.

    அடிக்கடி அந்த மர்மந பர்கள் வந்து சென்றதால், மூதாட்டி மருத்துவ அலுவலரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து வலியுறுத்தி யதின் காரணமாக பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் அரசு மருத்து வமனையில் தொடர்ந்து மர்ம நபர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மருத்துவமனை வார்டுக்குள் யார் வருகி றார்கள்?, யார் போகி றார்கள்? என்பது தெரியாமல் உள்ளது.

    இதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பரமத்தி வேலூர் அருகே ராயர்பாளை யத்தை சேர்ந்த பெண் பிரச வத்திற்காக சேர்க்கப்பட்டி ருந்தார். அவருக்கு துணையாக இருந்த, அந்த பெண்ணின் தாய் கைப்பை யில் 2 செல்போன்கள், பணம், கொலுசு உள்ளிட்டவை வைத்திருந்தார்.

    இந்நிலையில் இரவில் பிரசவ வார்டிற்கு வந்த மர்ம நபர்கள், செல்போன், கொலுசு, பணம் வைத்தி ருந்த கைப்பையை திருடி சென்று விட்டனர். இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் தெரிவித்தார்.

    அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கண்கா ணிப்பு கேமராவை பரிசோ தனை செய்தாகவும் தெரி வித்துள்ளார். மேலும் போலீசில் புகார் செய்யு மாறு அறிவுறுத்தியுள்ளார். அவர்களும் திருச்செங்கோடு போலீசில் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மருத்துவ மனை நிர்வாகமும் இதை கண்டுகொள்ளவில்லை.

    இதே நிலைமை நீடித்தால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் உடமை களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். எனவே திருட்டு, நோயாளிகளை மிரட்டுவதை போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நோயா ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×