search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமத்துவ பொங்கல் விழா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தன.
    • பாட்டை கேட்டதும் மாநகராட்சியின் 4-வது வார்டு பெண் கவுன்சிலர் சரிதா, அந்த பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டார்.

    கடலூர்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி வளாகத்தில் அலங்காரம் செய்து, ஆங்காங்கே கரும்புகள் வைக்கப்பட்டு இருந்தது. தாரை, தப்பட்டையும் இசைக்கப்பட்டு மாநகராட்சி அலுவலகம் விழா கோலம் பூண்டது.

    மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தன. அனைவரையும் வரவேற்று கோலப்பொடியால் எழுதப்பட்டு இருந்தது. அப்போது திரைப்பட பாடல்களும் இசைக்கப்பட்டன.

    சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ற பாடல் திடீரென இசைக்கப்பட்டது.

    இந்த பாட்டை கேட்டதும் மாநகராட்சியின் 4-வது வார்டு பெண் கவுன்சிலர் சரிதா, அந்த பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டார். இதை சக பெண் கவுன்சிலர்கள் கைதட்டி வரவேற்றனர். அவரோடு மற்றொரு சிறுமியும் சேர்ந்து நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

    அவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக சுகாதார ஆய்வாளர் ஒருவரும் தப்பாட்டத்துக்கு நடனமாடினார்.

    • இருமத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • ஊராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டன.

    கிருஷ்ணாபுரம்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், இருமத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாதன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் ராஜலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியம்மாள் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். இவ்விழாவில் மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி செங்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், குடிநீர் மேல் தேக்க தொட்டி இயக்குனர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கஸ்தூரி நாகராஜ், மணி, ராஜப்பன், தனலட்சுமி முருகன், சரோஜா அழகப்பன், ஆனந்தன், தேவி கார்த்திகேயன், சரவணன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
    • நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, தொண்டரணி அமைப்பாளர் ராஜகோபால் பகுதி செயலாளர்கள் சம்பத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகர் பகுதியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மணி, புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்தில் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் அடுத்த மாதம் 16-ந்தேதி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொள்ளும் 5 ஆயிரம் சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி, பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் மணி, பூபதி, இளைஞரணி செயலாளர் சதீஸ்குமார், வழக்கறிஞரணி துணை செயலாளர்கள் கந்தசாமி, அன்பழகன், புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரவி, மாணவரணி அமைப்பாளர் தாமோதரன், நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, தொண்டரணி அமைப்பாளர் ராஜகோபால் பகுதி செயலாளர்கள் சம்பத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×