search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திப்பு பஸ் நிலையம்"

    • இடிக்கப்பட்ட கோவில்களும் மீண்டும் கட்டித் தரப்படும் என்று அப்போதைய கமிஷனர் உறுதி அளித்தார்.
    • பாளையங்கால்வாயில் துவைத்த துணிகளை மாநகராட்சியில் கொண்டு வந்து காண்பித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், பிரம்ம நாயகம் மற்றும் பலர் திரண்டு வந்து அளித்த மனுவில், நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்ட போது அங்கு இருந்த 2 விநாயகர் கோவில்களும் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படும் என்று அப்போதைய கமிஷனர் உறுதி அளித்தார்.

    இதனை மீண்டும் கட்டித்தருமாறு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை கட்டப்படவில்லை. அதனை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த நிர்வாகி ஒருவர் துதிக்கையுடன் கூடிய விநாயகர் வேடத்தில் வந்திருந்தார்.

    தொடர்ந்து நெல்லையைச் சேர்ந்த சிராஜ் என்ற சமூக ஆர்வலர் பாளையங்கால் வாயை தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தார். முன்னதாக அவர் 10,15 வருடங்களுக்கு முன்பாக இருந்த பாளையங்கால்வாயில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எவ்வாறு தங்களது உடைமைகளையும், தங்களையும் அந்த கால்வாயின் நீரினால் தூய்மைப்படுத்தி கொண்டார்களோ, அதனைப் போன்றே பாளை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள பாளையங்கால்வாயில் துணிகளை துவைத்து, அந்த துணிகளின் நிலையை மாநகராட்சியில் கொண்டு வந்து காண்பித்தார். தொடர்ந்து அவர் பாளையங்கால்வாயை சுத்தப்படுத்திடவும், நெல்லையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மிக விரைந்து நடத்தி முடித்திட வேண்டியும் மனு அளித்தார்.

    ×