search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டப்பேரவை கூட்டம்"

    • சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
    • உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

    தமிழக சட்டசபையில் இன்று 3வது நாளாக கூட்டம் தொடங்கியது. இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

    இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

    இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது.

    இதில், பார்வையாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னீஸ், கையுந்துப் பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள் வசதிகள் உருவாக்கப்படும்.

    அதேபோல், திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறையால் நவம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    தற்போது 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் 2023-க்குள் மற்றும் கைப்பந்து ஆடுகளப் பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி, 400 மீ தடகள் பாதை, கால்பந்து மைதானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
    • இரங்கல் தீர்மானம் முடிந்து அவை நாளை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

    2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.சபாநாயகர் அப்பாவு தலைமையிலான தமிழக சட்டப்பேரவை கூடியது.

    இந்த கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதில், மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ராவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    தொடர்ந்து, க.நெடுஞ்செழியன், ஆரூர் தாஸ், தமிழறிஞர் ஒளவை நடராஜனுக்கு இரங்கல் தீர்மானம், ஓவியர் மனோகர் தேவதாஸ், மருத்துவர் மஸ்தான், கால்பந்து ஜாம்பவான் பீலே ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    இதன்பிறகு, மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிலையில், இரங்கல் தீர்மானம் முடிந்து அவை நாளை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நடக்கவிருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ரத்து.
    • முதல்வர் பதவியை உத்தவ்தாக்கரே ராஜினாமா செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவில்லை.

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது. உத்தவ் தாக்கரே அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து மகாராஷ்டிர சட்டசபையில் இன்று சிறப்பு கூட்டத்தை கூட்டி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

    தொடர்ந்து, உத்தவ் தாக்கரே பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார். அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறினார். சட்ட மேலவை பதவியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நடக்கவிருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் பதவியை உத்தவ்தாக்கரே ராஜினாமா செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவில்லை.

    நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லாததால் அதற்காக கூட்டப்பட்டிருந்த சிறப்பு பேரவை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, மாநில சட்டப்பேரவை செயலாளர் ராஜேந்திர பகவத் அறிவித்துள்ளார்.


    ×