search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சய் தத்"

    • நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் பாலிவுட் பிரபலம் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    தளபதி 67

    தளபதி 67

    தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.


    தளபதி 67 - சஞ்சய் தத்

    தளபதி 67 - சஞ்சய் தத்

    இந்நிலையில், தளபதி 67 படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சஞ்சய் தத் படம் குறித்து கூறிய வார்த்தைகளை குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை பகிர்ந்துள்ளார். மேலும் தளபதி 67 படத்தின் ஒரு வரி கதை கேட்ட உடனே நான் முடிவு செய்துவிட்டேன் இப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று; துடிப்புடன் இந்த பயணத்தை தொடங்குகிறேன் என்று சஞ்சய் தத் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இதனை குறிப்பிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    இதற்குமுன்பு சஞ்சய் தத் கேஜி.எஃப் 2-இல் ஆதீரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கபடவுள்ளார். #SanjayDutt
    புதுடெல்லி :

    பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கபடவுள்ளார்.

    இதுதொடர்பாக சஞ்சய் தத்துடன் தொலைபேசியில் பேசியதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திரா சிங் ராவத் தெரிவித்துள்ளார்.  அப்போது ​​திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் தானும் போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததை அவர் நினைகூர்ந்ததாகவும் கூறினார்.

    உத்தராகண்ட், டெல்லி, சண்டிகர் மற்றும் இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சஞ்சய் தத் போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். #SanjayDutt
    ×