search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கிலி பறிப்பு"

    • மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபர் தப்பி ஓடினார்.
    • வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தை அடுத்த கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி காமாட்சி (வயது 70) இவர் நேற்று காலை வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நடந்து சென்ற இளைஞர் காமாட்சி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செயது விசாரிக்கின்றனர். 

    • வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்
    • உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோலேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி ராணி (வயது 45). இவர்களுக்கு 20 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இவர் அமரடக்கியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் சங்கர் மற்றும் ராணி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள், ராணி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.

    அப்போது விழித்துக் கொண்ட அவர்கள், மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் அவர்களை த ாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த தம்பதியர் உடனடியாக மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பைக்கில் வந்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா சென்னசமுத்திரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதி (வயது 32). இவர் ஆற்காடு அடுத்த மாங்காடு கூட்ரோட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று காலை மாலதி வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். கம்பெனி அருகே நடந்து சென்றபோது பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் மாலதியின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

    இது குறித்து மாலதி ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×