search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை நியூஸ்"

    கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    கோவை, 
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51). 
     கட்டிட தொழிலாளி. இவர் கோவை சூலூரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் சேலம்- பாலக்காடு ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஆறுமுகம் மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். 
    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
     
    வேலாண்டிபாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மோகன் (60). சம்பவத்தன்று இவர் இடையர்பாளையம்- வ.உ.சி. நகர் கட் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன் பரிதாபமாக இறந்தார்.
     இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மரணம் அடைந்தார்.
    கோவை, 
    கோவை பேரூர் அருகே உள்ள மாதம்பட்டி காளிகை தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணபாண்டி (வயது 33). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி மணி பிரியா. இவர்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.சம்பவத்தன்று கிருஷ்ணபாண்டி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். மேலும் மது பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணபாண்டி  தனது மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் ேதாட்டத்தில் உள்ள கிணற்றின் சுவரில் அமர்ந்து இருந்தார். அப்போது மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் பேரூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து கிருஷ்ண பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    காரமடை அருகே 6 வயது சிறுமி திடீரென பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை, 
    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். டி.வி. மெக்கானிக்.  இவரது மகள் கவிஸ்ரீ (வயது 6).
     
     இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் கவிஸ்ரீ கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சின்னபுதூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து இருந்தார். சம்பவத்தன்று சிறுமி வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார்.
     
     அப்போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்த அவரது பாட்டி உடனடியாக சிறுமியை மீட்டு காரமடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கவிஸ்ரீக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 
    இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    கோவை சரவணம்பட்டியில் இளம்பெண்ணை ஒரு கும்பல் தாக்கியது.
    கோவை, 
    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் சக்திவேல் ( வயது 21). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்தார். 
     
    பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திய இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அருப்புக் கோட்டையைச் சேர்ந்த  தனது நண்பர்கள் முருகமணி ,கணேஷ், சந்துரு, கமலேஷ் ஆகியோருடன் சேர்ந்து வேலை தேடி வந்தார். 
    இந்நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு 10 மணி அளவில் சக்திவேல் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி- துடியலூர் சாலையில் உள்ள மெடிக்கல்  கடைக்கு மருந்து வாங்குவதற்காக சென்றார். 
     
    அப்போது அங்கு ஒரு இளம் பெண்ணை 3 வாலிபர்கள் தடுத்து நிறுத்தி அவரை கைகளால் தாக்கிக் கொண்டிருந்தனர்.  அந்த இளம்பெண் அழுதபடி இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேலும் அவரது நண்பர்களும் அந்த இளம்பெண்ணை தாக்கிய வாலிபர்களை தட்டி கேட்டனர். 
    அப்போது அந்த வாலிபர்கள் மது போதையில் இருந்தனர். தொடர்ந்து சக்திவேலும் அவரது நண்பர்களும் சத்தம் போடவே அந்த இளம்பெண்ணை விட்டுவிட்டு வாலிபர்கள் அங்கிருந்து  தப்பிச் சென்று விட்டனர். சம்பவத்தன்று இரவு சக்திவேல் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். 
     
    அப்போது ஏற்கனவே சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் மேலும் 4 பேரை அழைத்துக்கொண்டு வந்து சக்திவேலை அடையாளம் காட்டினர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில்  அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை எடுத்து சக்திவேலை வெட்ட முயன்றனர். அப்போது அவர் தடுக்க முயன்றார். 
     
    அப்போது தலை மற்றும் வலது கை , தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டுக்காயம் ஏற்பட்டு சக்திவேல் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவர் உடன் வந்திருந்த முருகமணி, கணேஷ் ஆகியோர் தடுக்க முயன்ற போது அவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 
    இதில் அவர்களுக்கு கைகள் மற்றும் முதுகில் வெட்டு விழுந்தது. அப்போது அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. பின்னர் அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 
     இந்த தகவல் கிடைத்ததும்  சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரிவாள் வெட்டு மற்றும் கத்தி குத்தில் காயம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில்   சேர்த்தனர்.  பின்னர் பலத்த காயமடைந்த முருகமணி, கணேஷ் ஆகியோரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை அரிவாளால் வெட்டிய ஏழு பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

    தனியார் நிறுவன ஊழியரிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது.
    கோவை, 
    விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி அருகே உள்ள வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 22). இவர் கோவை ஈச்சனாரி மார்க்கெட் ரோட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் செட்டிப்பாளையத்தில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு அறைக்கு திரும்பினார். வரும் வழியில் மோட்டார் சைக்கிளை கணேசபுரம் அருகே நிறுத்து விட்டு உடல் உபாதை கழிப்பதற்காக சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் அருகே 3 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் செல்வகணேசை கத்தியை காட்டி மிரட்டில் அவரிடம் இருந்து ரூ. 4,800 ரொக்க பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்

    கோவை, 
    தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டுக் குழு இன்று   வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை உள்ளிட்ட துறைகளின் பணிகளை கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் படி தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டுக் குழு ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள், அரசு சார்பாக மேற்கொண்ட பணிகள் குறித்து கேட்டறிந்தனர். 
    மக்கள் அவர்களிடம் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றனர். பின்னர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மண்புழு மூலம் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டனர். அதை தொடர்ந்து தடாகம் சாலையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டுக் குழு  உறுப்பினரும், எம்.ஏல்.ஏ.க்களுமான, டி.ஆர்.பி ராஜா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அம்மன் கே.அர்ச்சுனன், ஈஸ்வரன், அருள், அன்பழகன், ராமச்சந்திரன், எழிலரசன், சதன் திருமலைக்குமார், சிவக்குமார், பாலசுப்ரமணியன், ராஜ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர்  மற்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றி செல்வன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி துணை கமிஷனர் சர்மிளா, கவுன்சிலர்கள் அழகு ஜெயபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 6 மாதங்களாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டு
    கோவை, மே.24-
    கோவை அரசு கலைக்கல்லூரியில் புவியியல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் பேராசிரியை ஒருவர் கடந்த 6 மாதங்களாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று கோவை  கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள் பேராசிரியை முறையாகப் பாடம் எடுப்பது இல்லை என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா கூறியதாவது:-
    கடந்த 6 மாதமாக பேராசிரியர் பாடம் எடுக்காமல் உள்ளார்.  விரைவில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்க உள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆனாலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் வகுப்புக்கு வருவதில்லை.அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். 
    மேலும் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு வரும் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

    2021-22 ன் கீழ் ரூ.227 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா
    காளப்பட்டி, மே.24-
    தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் 2021-22 ன் கீழ் ரூ.227 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் வேளாண் வளர்ச்சி பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொண்டையம் பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். நடராஜன் எம்.பி, எஸ்.எஸ்.குளம் தி.மு.க.ஒன்றிய செயலாளரும், அட்மா தலைவருமான சுரேஷ்குமார், கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி வரவேற்றார். இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, பால்வ ளத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 210 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான 8 வகை விதைகள் மற்றும் 2 கிலோ மண்புழு உரம் 75 சதவீத மானியத்திலும், பயிர் ஊக்கத்தொகை 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டது. மேலும் ரூ.53 ஆயிரத்து 625 மதிப்பில் பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி துணைத்தலைவர் மணி என்ற விஜயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்
    கோவை, 
    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கார்த்திக் நகரை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மகள் இந்திரா பிரியதர்ஷினி (வயது 19). 
     
    இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் நுைழவு தேர்வுக்காக படித்து வந்தார். சம்பவத்தன்று ரகுநாதன் தனது மகளை பயிற்சி மையத்துக்கு அழைத்து சென்று விட்டார். பின்னர் மாலையில் அழைத்து வருவதற்காக சென்றார். அப்போது இந்திரா பிரியதர்ஷினி மாயமாகி இருந்தார். இது குறித்து ரகுநாதன் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள். 
     
    கே.கே. புதூர் என்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் அபர்ணா (19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    சம்பவத்தன்று இவர் தனது தந்தையிடம் கல்லூரியில் கட்டணம் கட்டுவதற்காக ரூ.15 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு கல்லூரிக்கு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.  இது குறித்து மாணவியின் தந்தை சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் பணத்துடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள். 

    ×