search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிந்தராஜ சுவாமி கோவில்"

    • சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று நடந்தது.

    இதனால் திருப்பதி மலைக்கு சென்ற பஸ்கள், பக்தர்களின் வாகனங்களை, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.

    இந்த சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    அதன் பின் படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் படப்பிடிப்பை நடத்த முற்பட்டனர்.

    இதனால் அங்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்களை படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் அவசர அவசரமாக வெளியேற்றினர்.

    தகவலறிந்த ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி திருப்பதி போலீசில் புகார் கொடுத்தனர்.

    இந்நிலையில் பக்தர்கள் அவதி, போக்குவரத்து இடையூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி அறிவித்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    ×