search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரமங்களா"

    பூஜைகள் செய்து கடவுளை வர வைக்கிறேன் என பணிப்பெண் கூறிய கதையையில் மயங்கி தங்க நகைகளை கொடுத்து ஏமாந்த தம்பதிக்கு, ஒன்னரை ஆண்டுகளாக ஏமாந்துள்ளோம் என்பது பின்னர்தான் தெரியவந்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் கோரமங்களா நகரத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி ஆலை நடத்தி வருபவர் ஜெயந்த். இவரது வீட்டில் எடுபிடி வேலை செய்து வருபவர் ரேஷ்மா. சில நாட்களுக்கு முன்னர், ஜெயந்திடம் சென்று தானும், தனது கணவரும் பூஜைகள் செய்து கடவுளை வர வைக்கிறோம் என கூறி கதை கட்டியுள்ளார்.

    மேலும், ‘நீங்கள் வீட்டில் இருக்க கூடாது. சில தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வேண்டும்’ என நிபந்தனைகள் விதித்துள்ளார்.
    ரேஷ்மாவின் பொய்யில் மயங்கிய ஜெயந்த் மற்றும் மனைவி, நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சில நகைகளையும் கொடுத்துவிட்டு வெளியூர் சென்றனர்.

    சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவர்கள், லாக்கரை திறந்து பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தனர். ரூ.4 கோடி மதிப்பிலான வைர, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் காணாமல் போயிருந்தன. இதனை அடுத்து, அவர்கள் உடனே போலீசில் புகாரளித்தனர்.

    புகாரை அடுத்து விசாரணை நடத்திய போலீசார் ரேஷ்மா மற்றும் அவரது கணவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் ஜெயந்த் மட்டுமல்ல போலீசாரே தலை சுற்றும் அளவுக்கு தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கடந்த ஒன்னரை ஆண்டுகளாக ரேஷ்மா, ஜெயந்தின் வீட்டில் சிறிது சிறிதாக திருடி வந்துள்ளார். திருடப்பட்ட பணம் மற்றும் நகையில் கார், பைக் மற்றும் குத்தகைக்கு அடுக்குமாடி குடியிருப்பு என சகலமும் வாங்கி குவித்துள்ளனர். இதனை அடுத்து, மேற்கண்ட பொருட்களை கைப்பற்றிய போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    ×