search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைகாலம்"

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நீர் மோர் பந்தல் நடந்தது.
    • மாவட்ட தலைவர் தரணி முருகேசன் திறந்து வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை மாவட்ட தலைவர் தரணி முருகேசன் திறந்து வைத்தார். மாநில பொதுச் செயலாளரும், பெருங்கோ ட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம், தேசிய பொது குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன், மாநில மகளிரணி துணை தலைவி கலா ராணி, செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பிரவீன், ராமச்சந்திரன், ரஜினிகாந்த், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்மா கார்த்திக், மணி மாறன், பவர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
    • கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியை சோ.கமலசுந்தரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.

    நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் என்று சொல்லப்படும் உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை நாம் பழங்கள் உண்பதன் மூலம் பெற முடியும்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் 150 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

    பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

    உற்பத்தி செய்யப்பட்ட பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது அவற்றின் விலை அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் சரியான சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததால் சந்தைக்கு விற்பனைக்காக வரும்போது அவற்றின் தன்மை குறைந்துவிடுகிறது.

    மேலும் கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது. பழச்சாறு உள்ளிட்ட பானங்கள் வடிகட்டிய பழகூலுடன், சர்க்கரை, சிட்ரிக் அமிலம் சேர்த்து தயார் செய்வதன் மூலம் பானங்களை கெடாமல் வைத்திருக்க முடியும்.

    இதற்கான பயிற்சிகள் அனைத்தும் வேளாண்மை அறிவியல் நிலையத்தால் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு வேளாண் விளைப்பொருட்களுக்கு ஏற்றவாறு பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்று தரப்படுகின்றது.

    ஆர்வமுள்ளவர்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு ரெயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.
    • தெற்கு ரெயில்வேயில் 20 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    புதுடெல்லி:

    இந்த ஆண்டு கோடை காலத்தில் ரெயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரெயில்கள் மூலம் கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்துக்கு இந்திய ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த சிறப்பு ரெயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.

    அதிகபட்சமாக தென்மேற்கு ரெயில்வேயில் 69 சிறப்பு ரெயில்களும், தென்மத்திய ரெயில்வேயில் 48 சிறப்பு ரெயில்களும், தெற்கு ரெயில்வேயில் 20 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.

    இருக்கைகளை முடக்கிவைத்தல், அதிக கட்டணம் வசூலித்தல், இடைத்தரகர் நடவடிக்கை போன்ற முறைகேடுகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக ஜிகரெண்டா மலர்கள் பூத்து குலுங்குகிறது.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை புன்னகையோடு வரவேற்கும் விதமாகவும் மலைச்சாலைகளின் இருபுறமும் பூத்துகுலுங்கும் ஜிகரெண்டா மலர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது.

    கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு மற்றும் பழனி செல்லக்கூடிய சாலை ஓரங்களில் உள்ள இந்த மரங்களில் இளநீல ஊதா நிறத்தில் மரம் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகிறது. இந்த பூக்கள் கோடைகாலத்தை வரவேற்கும் வகையில் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மட்டுமே பூக்கக்கூடிய பூக்களாகும். தற்போது இவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக பூத்து குலுங்குகிறது.

    ×