search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை:"

    • செந்தில் குமரன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • புதுச்சேரியில் இரவு நேரத்தில் அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    புதுச்சேரி மங்களம் தொகுதி பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில்குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

    பா.ஜ.க. பிரமுகரான செந்தில் குமரன் வில்லியனூர் பகுதியில் தனது வீட்டுக்கு அருகே பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செந்தில் குமரன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் இரவு நேரத்தில் அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் கொலையில் தொடர்புடைய புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 43), புதுச்சேரி கொம்பாக்கம் சிவசங்கர் (23), புதுச்சேரி கோர்கார்ட் பகுதியைச் சேர்ந்த ராஜா (23), புதுச்சேரி தனத்துமேடு வெங்கடேஷ் (25), கடலூர் கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த பிரதாப் (24), புதுச்சேரி கோர்கார்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (23), புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) ஆகிய 7 வாலிபர்கள் இன்று ஜே.எம்.எண் 3. நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு சரணடைந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஏழு பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 7 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து மாலையில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

    • நாகராஜுடன் மது குடிக்க சென்ற நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் ஊராட்சியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது41). அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார்.

    நேற்றுமாலை நாகராஜ், மது குடிப்பதற்காக கிளாய் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே தனது நண்பர்களுடன் சென்றார்.

    அப்போது நண்பர் ஒருவர் கூடுதலாக மது வாங்கிவிட்டு திரும்பி வந்த போது நாகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடன் இருந்த மற்ற நண்பர்கள் மாயமாகி இருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. நாகராஜுடன் மது குடிக்க சென்ற நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கொலையுண்ட நாகரா ஜுக்கு திவ்யா என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். நாகராஜ் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தார்.

    அவரது கொலைக்கு பெண்தகராறு காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    • வேலுசாமி குடும்பத்திற்கும், வடிவேல் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தலைமறைவாக இருந்த வேடி மற்றும் 17 வயது சிறுவனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.

    கீழ்ன்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி (வயது 51). மண்பாண்ட தொழிலாளி. இவரது மனைவி சுசிலா (45). இவர்களுக்கு தமிழழகன் (17), கோபிநாத் (12). என 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்களது எதிர் வீட்டில் வசிப்பவர் வடிவேல். இவரது மனைவி சாந்தி (42). தம்பதிகளுக்கு வேடி (19), 17 வயது உடைய சிறுவன் ஒருவன் என 2 மகன்கள் உள்ளனர்.

    வேலுசாமி குடும்பத்திற்கும், வடிவேல் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பகல் வேலுசாமி வீட்டின் முன்பு கேமரா பொருத்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது சாந்தி ஏன் எங்களது வீடு தெரிகிற மாதிரி கேமரா பொருத்துகிறாய் என்று வேலுசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு வேலுசாமி நீங்கள் அடிக்கடி என்னிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் அதனால் கேமரா பொருத்துகிறேன் என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த வேலுசாமி சாந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட சாந்தியின் மகன்கள் வேடி மற்றும் சிறுவன் ஓடி வந்து வேலுசாமியை அடித்து உதைத்து அருகில் இருந்த மண்வெட்டியால் தலையில் தாக்கினர்.

    இதில் வேலுசாமியின் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை தடுக்க வந்த வேலுசாமியின் மனைவி சுசிலா, தாயார் நல்லம்மா ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேலு சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வேடி மற்றும் 17 வயது சிறுவனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோவில் தூங்கிய தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற பல்லு மோகன் (வயது 33).திருமண பந்தல், சமையல் ஆர்டர் எடுத்து தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் புது வண்ணாரப்பேட்டை , அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெருவில் உள்ள முருகன் கோவில் விழாவுக்காக பந்தல் போடும் பணியில் இருந்தார். நேற்று இரவு வேலை முடிந்ததும் மதுபோதையில் இருந்த மோகன் அதே தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவில் படுத்து தூங்கினார்.

    இதற்கிடையே இன்று அதிகாலை ஆட்டோவை எடுப்பதற்காக டிரைவர் ஒருவர் வந்த போது ஆட்டோவுக்குள் மோகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மோகன் கொலை செய்யப்பட்டது ஏன்? கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆட்டோவில் தூங்கிய தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×