search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயம்பேடு காய்கறி"

    • தமிழக அரசு மற்றும் அங்காடி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.
    • தமிழக அரசு மற்றும் அங்காடி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

    சென்னை:

    கோயம்பேடு சந்தைக்கு தினமும் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்து குவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் கோயம்பேட்டில் சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, இந்த சந்தையை திருமழிசை பகுதிக்கு மாற்றி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அறிக்கை தயாராவதாக தகவல்கள் வெளியாகின.

    அவ்வாறு மாற்றியமைக்கும் பட்சத்தில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வணிகர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இதுகுறித்து கோயம்பேடு அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றப்போவதாக வெளியாகியுள்ள தகவல் வெறும் வதந்தி. இதை நம்ப வேண்டாம் என்றனர். கோயம்பேடு மார்க்கெட் கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் ஜி.டி. ராஜசேகரன் கூறும்போது, கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்ற வேண்டும் என்றால், அரசு மற்றும் அங்காடி நிர்வாகத்தினர், வியாபாரிகளுக்கு முறையாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும். பின்னர் இது குறித்து கருத்துகள் கேட்கப்படும். ஆனால் இதுவரை தமிழக அரசு மற்றும் அங்காடி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

    எனவே கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றப் போவதாக கூறப்படும் வதந்தியை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றார்.

    ×