search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள குண்டு வெடிப்பு"

    • வெடிகுண்டு வைத்தது நான்தான் என்று கொடக்கரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணமடைந்துள்ளார்.
    • சரணடைந்த மார்ட்டினிடம் கேரள மாநில ஏடிஜிபி அஜித் குமார் நேரில் விசாரித்து வருகிறார்.

    கேரளாவில் இன்று காலை 9 மணியளவில் கிறிஸ்துவ கூட்டரங்களில் 3 குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு படையும் கேரளா விரைந்துள்ளனர்.

    இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார்.

    வெடிகுண்டு வைத்தது நான்தான் என்று கொடக்கரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணமடைந்துள்ளார்.

    கண்ணூரில் மற்றொருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, சரணடைந்த டோமினிக் மார்ட்டின் என்பவரை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணக்கார காவல் நிலைய போலீசார் மற்றும் திருச்சூர் மாவட்ட போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சரணடைந்த மார்ட்டினிடம் கேரள மாநில ஏடிஜிபி அஜித் குமார் நேரில் விசாரித்து வருகிறார்.

    ×