search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேபி ராமலிங்கம்"

    • வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி போட்டியிட உள்ளது.
    • சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தற்பொழுது முயற்சித்து வருகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட பா.ஜனதா சார்பில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில துணைத் தலைவர் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்பொழுது வருகிற ஜனவரி 2-ம் தேதி தருமபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுத்து குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.

    உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படக்கூடியவர், அவர் அமைச்சராக வேண்டும் என்று எல்லோரும் கூறி வந்தார். அப்படி என்றால் தற்பொழுது ஸ்டாலினால் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இருப்பவர்கள் யாரும் செயல்படாதவர்கள், திறமை இல்லாதவர்கள் என்று தான் அர்த்தம்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி போட்டியிட உள்ளது. சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தற்பொழுது முயற்சித்து வருகிறது. ஒரு வேளை கூட்டணி சேர்ந்தால் தான் தி.மு.க.வை அழிக்க முடியும் என்ற நிலை உருவானால் அப்பொழுது அதைப் பற்றி பேசுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் திரண்ட 100-க்கும் மேற்பட்டோர் ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்றனர்.
    • போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    சேலம்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் தியாகி சுப்பிரமணியசிவா நினைவு மணிமண்டப வளாகத்தில் பாரத மாதா நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நினைவாலயத்திற்கு கடந்த வியாழக்கிழமை பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் தலைமையில் தருமபுரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் உள்பட நிர்வாகிகள் சென்றனர்.

    அப்போது நினைவாலயம் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை திறக்குமாறு மண்டப காப்பாளரிடம் பா.ஜ.கவினர் கூறினர். அவர் பூட்டை திறக்க மறுத்ததால் பூட்டை உடைத்து நினைவாலயத்திற்குள் சென்ற பா.ஜ.க.வினர் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதுகுறித்து நினைவு மண்டப காப்பாளர் சரவணன் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட பா.ஜ.க.வினர் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கே.பி.ராமலிங்கம், பா.ஜ.க. பென்னாகரம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவலிங்கம், பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் மவுனகுரு, பா.ஜ.க. தொண்டர் அணி மணி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் ஆறுமுகம், மவுனகுரு, மணி ஆகிய 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

    இதில் கே.பி. ராமலிங்கத்திற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள பொன்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அப்போது கே.பி. ராமலிங்கத்திற்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கூறியதால் தருமபுரியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இ.சி.ஜி. மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து தொடர் பரிசோதனைக்காக நேற்றிரவு 11 மணிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு, ஈ.சி.ஜி. உள்பட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .

    இதற்கிடையே பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் திரண்ட 100-க்கும் மேற்பட்டோர் ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதையடுத்து கே.பி.ராமலிங்கம் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு பா.ஜனதாவினர் திரண்டுள்ளதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    ×