search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேசரி வகைகள்"

    • குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்புகளில் ஒன்று சேமியா கேசரி.
    • மாலை வேளையில் தேனீருடன் சுவைக்கலாம்.

    குழந்தைகள் பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்புகளில் ஒன்று தான் சேமியா கேசரி. இதனை மாலை வேளையில் தேனீருடன் சுவைக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 500 கிராம்

    சர்க்கரை - 400 கிராம்

    நெய் - தேவையான அளவு

    முந்திரி, பாதாம் - 2 (தேவையான அளவு)

    ஏலக்காய் - ஒரு ஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிதளவு

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும். அதனுடன் சேமியாவையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சேமியாவை வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு சேமியா வெந்த பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து சேமியா கேசரியில் சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி இறக்கினால் சேமியா கேசரி தயார்.

    ×