search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டம் அலைமோதியது"

    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கடற்கரை களை கட்டியது
    • திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.


    கன்னியாகுமரி, ஆக.6-

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக இருந்தனர். இதனால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர்.

    இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்ற னர். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசா ரும், கடலோர பாது காப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளின் வந்த வண்ணம் உள்ளனர்.
    • படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்தனர்.


     



    ஏற்காடு:

    கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடை யும் நிலையில், ஏற்காட்டில் ஏராள மான சுற்றுலா பயணி

    கள் தங்கள் குடும்பங்களுடன் குவிந்ததால் களைகட்டியது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால், சீதோ ஷண நிலை குளுமையாக மாறியுள்ளது.

    இதை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில், பள்ளி களுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் விடுமுறையின் இறுதி ஞாயிற்று கிழமையான இன்று வழக்கத்தை விட ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரிபூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், பொட்டானிக்கல் கார்டன், லேடிசீட், போன்ற இவர்களில் குடும்பத்துடன் பொழுதை களித்தனர்.

    மேலும் இங்குள்ள படகு இல்லத்தில், குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் ஏற்காடு வந்ததால் மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



     


    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவானது.
    • வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு, 

    தமிழகத்தில் பள்ளிக ளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த தால் பள்ளி திறப்பை தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    இதனையேற்று ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவானது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்தது. இதனால் மீண்டும் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனையேற்று 2-வது முறையாக பள்ளி தேதி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 12-ந் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், ஜூன் 14-ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கோடைகால விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் நாளை பள்ளிகள் திறப்பையொட்டி வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இதன்படி ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் நேற்று இரவு முதலே மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தொலைதூரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் முன்பதிவு நிரம்பிவிட்டன.

    இதனையடுத்து வெளியூரில் இருந்து ஈரோடுக்கு வரும் மக்கள் சிரமம் இன்றி வருவதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.

    இதேப்போல் ஈரோடு ரெயில் நிலையங்க ளிலும் கடந்த 2 நாட்களாக பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கின்றன. வெளியூர் சென்றவர்கள் குடும்பம், குடும்பமாக மீண்டும் ஈரோடுக்கு திரும்பி வரத் தொடங்கி யுள்ளனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. முன்பதிவு பெட்டிகள் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் இடம் பிடிக்க மக்கள் போடா போட்டி போட்டனர்.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களிலும் அங்கிருந்து ஈரோடு வந்த ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பள்ளி திறப்பையொட்டி ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் போன்ற பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகளில் பெற்றோர் குழந்தைகளுக்கு புதிய புத்தகப்பை, நோட்டுகள், எழுதுப்பொருட்கள் வாங்க குவிந்தனர். இதேபோல் ஷூ, பெல்ட் கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி திறப்பையொட்டி ஏற்கனவே பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. 

    • காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
    • சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி : 

    பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படை யெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். கன்னியா குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளி வாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழுகை நடத்தினர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். கன்னியாகுமரியில் அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ×