ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளின் வந்த வண்ணம் உள்ளனர். படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்தனர்.
படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள். 
படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள். 
Published on

ஏற்காடு:

கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடை யும் நிலையில், ஏற்காட்டில் ஏராள மான சுற்றுலா பயணி

கள் தங்கள் குடும்பங்களுடன் குவிந்ததால் களைகட்டியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால், சீதோ ஷண நிலை குளுமையாக மாறியுள்ளது.

இதை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், பள்ளி களுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் விடுமுறையின் இறுதி ஞாயிற்று கிழமையான இன்று வழக்கத்தை விட ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரிபூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், பொட்டானிக்கல் கார்டன், லேடிசீட், போன்ற இவர்களில் குடும்பத்துடன் பொழுதை களித்தனர்.

மேலும் இங்குள்ள படகு இல்லத்தில், குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் ஏற்காடு வந்ததால் மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com