search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் வசதி"

    • ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதி செய்யப்படுகிறது.
    • திருமங்கலம்- மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது.

    மதுரை

    மதுரை ரெயில் நிலையத்தில் அதிக ரெயில்களை கையாள வசதியாக, ரூ.2.5 கோடி செலவில் புதிய நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகி றது. இதற்காக 5, 6-வது பிளாட்பாரங்களுக்கு இடையே புதிய பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    இது 450 மீட்டர் நீளத்தில் அமைகிறது. பிளாட்பாரம் நடுவில் 13 மீட்டர் அகலம், இருபுறமும் 9 மீட்டர் அகலத்திலும் அமைகிறது. அங்கு 325 ச.மீ. அளவில் மேற்கூரைகள் அமைக்கப்பட உள்ளது.

    அடுத்தபடியாக மேற்கு நுழைவுவாயில் அருகே உள்ள தற்போதைய 6-வது பிளாட்பாரம், எல்லீஸ் நகர் பாலம் அருகே, 272 மீட்டருக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த புதிய பிளாட்பாரம், 5.5 மீட்டர் அகலம் உடையதாக இருக்கும்.

    இதே போல பிளாட்பாரம் எண் 1, 2, 3, 4, 5 ஆகியவை வடக்கு பகுதியில் முறையே 70, 60 மற்றும் 20 மீட்டர் அளவுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இங்கு பயணிகள் எளிதாக சென்று வரும் வகையிலும், டிராலி சூட்கேஸ் உருட்டி செல்லும் வகையிலும் காங்கிரிட் தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலைய கட்டிடமும், கூடுதலாக புதிய பிளாட்பாரமும் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன.

    திருமங்கலம்- மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. சிக்னல் கம்பங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. திருமங்கலம்- மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிந்து வருகிற டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும்.

    மதுரை ரெயில் நிலையத்தில் நடைபெறும் பிளாட்பாரம் வளர்ச்சி பணிகள், ெரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தால் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ×