search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் பஸ் வசதி"

    • மாணவ-மாணவிகள் தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரே பஸ்ஸில் படிக்கட்டுகளில் தொங்கியவரே கல்லூரிக்கு பயணம் செய்து வருகின்றனர்.
    • எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனிமாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வீரபாண்டி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகளின் வசதிக்காக கடந்த ஆண்டு மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டி கல்லூரி வரை அரசு டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் எளிதாக பஸ்களில் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து கூடுதலாக மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

    எனவே அரசு சார்பில் இயக்கப்பட்டு வரும் ஒரே ஒரு பஸ் மாணவ-மாணவிகளுக்கு போதுமானதாக இல்லை. மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு வேறு பஸ் சேவைகள் எதுவும் இல்லை. வீரபாண்டி கல்லூரிக்கு செல்ல வேண்டும் எனில் தேனிக்கு சென்று அதன் பின்னர் வேறு ஒரு பஸ்ஸில் வீரபாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் மாணவ-மாணவிகள் தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரே பஸ்ஸில் படிக்கட்டுகளில் தொங்கியவரே கல்லூரிக்கு பயணம் செய்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் மாணவிகளும் படிகளில் நின்றவரே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    மாணவ-மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • வடபழஞ்சிக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தரவேண்டும்.
    • காலை, மதியம், மாலை வேளைகளில் பஸ்கள் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    மதுரை

    மதுரை அருகே உள்ளது வடபழஞ்சி ஊராட்சி. இவ்வூராட்சிக்குட்பட்ட முத்துப்பட்டி, நாகமலை புதூர் பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பொது போக்கு வரத்தையே பிரதானமாக பயன்படுத்தி வந்தனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வடபழஞ்சிக்கு காலை, மதியம், மாலை என 3 வேளைகளில் காளவாசல், நாகமலை புதுக்கோட்டை வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

    கொரோனா தாக்கம் ஏற்பட்டபோது இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டு காலை 6 மணிக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. தற்போது வரை அந்த பஸ் மட்டுமே சென்று கொண்டி ருக்கிறது.

    இதனால் போதிய பஸ் வசதி இல்லாமல் பொது மக்கள் பெரிதும் சிரமத்திற் குள்ளாகின்றனர். மேலும் இப்பகுதியில் காமராஜர் பல்கலைக்கழகம், தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளி உள்ளன. வடபழஞ்சியில் இருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் சுமார் 2 கிலோமீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது.

    வடபழஞ்சியில் இருந்து கரடிபட்டி செல்லும் சாலை யில் அரசு உயர்நிலைப்பள்ளி, செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிக்கு நடந்தே செல்லும் நிலையும் உள்ளது. கோடை விடுமுறைக்கு பின் நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மீண்டும் காலை, மதியம், மாலை வேளைகளில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே இந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • புதியவழித்தடம் மற்றும் கூடுதல் நடை பஸ் இயக்க தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    • கூடுதல் நடை பஸ் இயக்கத்தை போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஊத்தங்கரை தாலுகாவில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்களின்வழித்தடம் நீட்டிப்பு மற்றும் கூடுதல் நடை பஸ் இயக்கத்தை போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா திருப்பத்தூர் சாலையில் சேலம்கோட்டம் தர்மபுரி மண்டல தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில்கொண்டம்பட்டி, நாப்பிராம்பட்டி மற்றும் நடுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பயன்பெறும் வகையில் புதியவழித்தடம் மற்றும் கூடுதல் நடை பஸ் இயக்க தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், பர்கூர்டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகயோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில ்போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு,கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநர் இரா.பொன்முடி,தர்மபுரி மண்டல பொது மேலாளர் எஸ்.ஜீவரத்தினம், துணை மண்டல மேலாளர் அரவிந்தன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, மாவட்டஊராட்சிக் குழுத்தலைவர் மணிமேகலைநாகராஜ், கிளை மேலாளர் சீனிவாசன், தொழில் நுட்ப துணை மேலாளர் கலைவாணன், ஊத்தங்கரை ஒன்றியக்குழுத் தலைவர் உஷாராணிகுமரேசன், துணை தலைவர் சத்தியவாணி செல்வம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ரஜினிசெல்வம், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கதிரவன், தாசில்தார் திருமலைராஜன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுபோக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    • பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
    • சாமிகவுண்டன் பாளையத்துக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சாமிகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பல்லடம் அடுத்த சாமிகவுண்டன் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 650 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு காலை வரும் நேரத்திலும் மாலை பள்ளி முடிந்து வீடு செல்லும் நேரத்திலும் பஸ் வசதி இல்லாமல் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே பல்லடத்தில் இருந்து சாமிகவுண்டன் பாளையத்துக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    ×