search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் தலைமைச்செயலாளா்"

    • கால்நடை வளா்ப்போரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
    • நீதிமன்ற ஆணையின் மூலம் 1,089 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 37 கால்நடை உதவி மருத்துவா்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தென்காசி சு.ஜவஹா் பேசியதாவது:-

    தமிழக கால்நடை பராமரிப்புத் துறை 130 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகவும் தொன்மையான துறையாகும். தமிழகத்தில் கால்நடை வளா்ப்போரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு கால்நடை மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 3.92 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் 2 பன்முக கால்நடை மருத்துவமனை, 7 கால்நடை மருத்துவமனைகள், 102 கால்நடை மருந்தகங்கள், 2 நடமாடும் கால்நடை மருந்தகங்கள் மற்றும் 38 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் 3,21,236 மாட்டினங்கள், 5,92,590 ஆட்டினங்கள், 1,67,27,394 கோழியினங்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வாய் நோய் வராமல் தடுக்கும் வகையில் 2,92,822 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன்,1.2 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சைப் பணிகள், 13.5 லட்சம் குடற்புழு நீக்கப் பணிகள் மற்றும் 2.02 லட்சம் செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 3,030 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்களில் 1,141 பணியிடங்கள்நீதிமன்ற வழக்குகளால் நிரப்பப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் அனைத்து சட்ட சிக்கல்களும் தீா்க்கப்பட்டு நீதிமன்ற ஆணையின் மூலம் 1,089 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளன என்றாா்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநா் பொன்.பாரிவேந்தன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பொது மேலாளா் ஏ.பி.நடராஜன், பால் வளத்துறை துணைப்பதிவாளா் சைமன் சாா்லஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×