search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Animal Husbandry"

    • சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    • கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டு களில் சமீப காலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி செல்வதும், குரைப்பதும் என அச்சுறுத்தி வருகிறது. சில நேரங்களில் திடீரென்று தெருக்களில் செல்லுகின்ற வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துகளும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் தெருநாய்கள் கடித்து பலர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்ப டுத்த வேண்டும் என்று திருவள்ளூர் நகர மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உத்தரவின் பேரில் திருவள்ளூர் சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    முதல் கட்டமாக நகராட்சி பகுதியில் உள்ள 11-வது வார்டில் இன்று காலை சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி திருவள்ளூர் நகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களை பிடித்து நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவர்களை கண்டதும் தப்பி ஓட முயன்ற நாய்களை விரட்டி சென்று வலை கூண்டை வீசி பிடித்து வாகனத்தில் கொண்டு சென்றனர். தெருக்களில் சுற்றும் நாய்களை பிடிக்கும் பணி இன்னும் வரும் நாட்களிலும் தொடர்நது நடைபெறும் என்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்து உள்ளார்.

    • மாடுகளால் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்.

    சென்னை:

    உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியுடன் அலெர்ட் அறக்கட்டளை இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயிர் காக்கும் தானியங்கி வெளிப்புற 'டிபிபிரி லேட்டர்' கருவியின் செயல்பாட்டை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.

    இதில் பங்கேற்ற கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி அவசியமானது. மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்படும். மக்கள் கூடும் பொது இடங்களில் இக்கருவி அமைக்கப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பு பலகையும் மக்களுக்கு தெரிவிக்கப்படும். சுகாதாரத்தை மக்கள் தேடி செல்ல வேண்டும்.

    வேதனையான சம்பவம் சாலையில் சுற்றித் திரிந்த மாடு முட்டி ஒருவர் குடல் கிழிந்து சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் மயிலாப்பூர், திருவான்மியூர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., நங்கநல்லூர், பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.

    நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் வீட்டுக்குள்ளேயே வளர்க்க வேண்டும். சாலையில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களிடம் இனிமேல் திருப்பி ஒப்படைக்கமாட்டோம்.

    மாடுகளால் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். இனிமேல் பிடிக்கப்படுகிற மாடுகளை பேணி காக்க கால்நடை வளர்ப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலங்காடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் மற்றும் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் முகாமை துவக்கி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலங்காடு ஊராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி மற்றும் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் முகாமை துவக்கி வைத்தனர்.

    தொடர்ந்து கால்நடை களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கால்நடை அபிவிருத்தி சிறப்பு அரங்குகளை பார்வையிட்டு கேட்டறிந்தனர்.

    மேலும் கால்நடை வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆலோசனைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் கால்நடை வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சுமதி, ஆவின் பொது மேலாளர் மருத்துவர் ராஜசேகர், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக அதிகாரிகள் குழுவினர் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் வந்து மருத்துவ சிகிச்சை பலன் பெற்றனர்.

    • வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும்.
    • தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்புக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையும் வழங்கப்படும்.

    ஈரோடு:

    தொழில் முனைவோர் மத்திய அரசு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக 2021-22-ம் ஆண்டு முதல் தேசிய கால்நடை இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி வேலை வாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காக கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின்படி கோழி வளர்ப்பு, செம்மறி யாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதல் இலக்காகும்.

    கோழி வளர்க்க முனைவோர் 1,000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்வதற்கு மூலதனத்தில் 50 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும்.

    பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையும், தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்புக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையும் வழங்கப்படும்.

    இந்த திட்டத்துக்கு தனி நபர், சுய உதவி குழுவினர், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புபினர், விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கத்தினர் தகுதியா னவர்கள்.

    திட்டத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திட்ட அங்கங்களில் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் https://nlm.udyamimitra.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்கள், ஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ராஜாங்கபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பசுக்களுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகே ராஜாங்கபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே . பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி, ஊட்டச்சத்து ,சினை பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து பசுக்களுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது. ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் மருந்து கொடுக்கப்பட்டது.

    முகாமில் சிறந்த கிடாரிகளுக்கு பரிசு பொருள் மற்றும் சிறந்த கன்று வளர்த்த ஈஸ்வரன், துரைராஜ், ரத்தினம், பரமசிவம், சிதம்பரத்தாய், முத்து, வெள்ளத்துரை, கிருஷ்ணன் மற்றும் மாசானம் ஆகிய 9 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர் பிரிதிபா, வார்டு உறுப்பினர் இசக்கிபாண்டியன், ராஜகன்னி, முன்னாள் தலைவர் ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும்.
    • ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் தயாராக இல்லை.

    திருப்பூர் :

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 ஆடுகள் வாங்க ஒரு ஆட்டுக்கு ரூ. 3,500 வீதம் 17 ஆயிரத்து 300 ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகளுக்கு ஆடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் அவிநாசி வடுகபாளையம், சின்னேரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு சமீபத்தில் ஆடுகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட ஆடுகள் தரமற்று இருப்பதாகவும், ஒரு ஆட்டின் விலை 1,000 முதல் 1,500 ரூபாய் வரை தான் தேறும் எனவும் பயனாளிகள் கூறினர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், ஒவ்வொரு வட்டார அளவிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்த வியாபாரிகள் மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது. மொத்த வியாபாரிகளால் கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியாக இல்லாவிட்டால், வேறு ஆடுகளை எடுத்து வரச்சொல்லி வாங்கிக் கொள்ளலாம். ஆடுகளை தேர்வு செய்வது பயனாளிகள் தான். பயனாளிகள் விருப்பப்பட்டால் சந்தைக்கு சென்றும் கூட ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றனர்.

    இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    அரசின் ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும். பயனாளிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட சந்தைக்கு சென்று, விரும்பிய ஆடுகளை வாங்கி கொள்ளலாம். அதற்கான தொகையை கால்நடை மருத்துவர்கள் விடுவித்து விடுவர்.தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு பொதுவாக ஒரு மொத்த வியாபாரி மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது.

    அவ்வாறு கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்ற புகாரும் வருகிறது.விவசாயிகளே நேரடியாக சந்தைக்கு சென்று ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறினாலும் அதற்கான தொகையை விடுவிப்பதில், துறை ரீதியாக நடைமுறை சிக்கல் உள்ளது.எனவே, பழைய நடைமுறைப்படி, அந்தந்த வட்டார கால்நடை மருத்துவர்கள் மூலம் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அவிநாசி, பல்லடம், திருப்பூர் உட்பட திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட 5 வட்டாரத்தில் தலா 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆடு வழங்கப்பட்டு வருகிறது.சில இடங்களில் ஆடுகள் அடுத்தடுத்து பலியாகின்றன. அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் கிராமத்தில் 3 ஆடுகள் பலியாகின.

    இது குறித்து பயனாளிகள் கூறுகையில்,

    அரசால் இலவசமாக வழங்கப்பட்ட ஆடுகள், சரிவர தீவனம் உட்கொள்ளாமல், சோர்ந்து போய் இருந்தன. சில ஆடுகள் இறந்தும் போயின. இறந்த ஆடுகளுக்கு பதிலாக, வேறு ஆடுகள் வழங்க ஏற்பாடு செய்வதாக கால்நடை பராமரிப்பு துறையினர் உறுதி அளித்துள்ளனர் என்றனர்.கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆடுகள் இறந்திருப்பதாக பயனாளிகள் தரப்பில் இருந்து புகார் பெறப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது:-

    அரசால் வழங்கப்பட்ட கால்நடைகளின் உண்மையான சந்தை மதிப்பை கால்நடை பராமரிப்பு துறையினரிடம் இருந்து பெற்று வரும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.ஆனால் எங்கிருந்தோ ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் தயாராக இல்லை. இதனால், அவை இறந்தால் இன்சூரன்ஸ் தொகையும் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கால்நடை வளா்ப்போரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
    • நீதிமன்ற ஆணையின் மூலம் 1,089 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 37 கால்நடை உதவி மருத்துவா்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தென்காசி சு.ஜவஹா் பேசியதாவது:-

    தமிழக கால்நடை பராமரிப்புத் துறை 130 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகவும் தொன்மையான துறையாகும். தமிழகத்தில் கால்நடை வளா்ப்போரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு கால்நடை மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 3.92 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் 2 பன்முக கால்நடை மருத்துவமனை, 7 கால்நடை மருத்துவமனைகள், 102 கால்நடை மருந்தகங்கள், 2 நடமாடும் கால்நடை மருந்தகங்கள் மற்றும் 38 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் 3,21,236 மாட்டினங்கள், 5,92,590 ஆட்டினங்கள், 1,67,27,394 கோழியினங்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வாய் நோய் வராமல் தடுக்கும் வகையில் 2,92,822 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன்,1.2 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சைப் பணிகள், 13.5 லட்சம் குடற்புழு நீக்கப் பணிகள் மற்றும் 2.02 லட்சம் செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 3,030 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்களில் 1,141 பணியிடங்கள்நீதிமன்ற வழக்குகளால் நிரப்பப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் அனைத்து சட்ட சிக்கல்களும் தீா்க்கப்பட்டு நீதிமன்ற ஆணையின் மூலம் 1,089 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளன என்றாா்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநா் பொன்.பாரிவேந்தன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பொது மேலாளா் ஏ.பி.நடராஜன், பால் வளத்துறை துணைப்பதிவாளா் சைமன் சாா்லஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • செக்கானூரணி அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுக்கப்பட்டது.
    • கால்நடை வளர்ப்புக்கென்று தனியாக ஒரு குழு அமைத்து பாதுகாத்து வந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செக்கா னூரணி அருகிலுள்ள எஸ்.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மதுரை அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் கல் என்பதை கண்டறிந்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    ஆரம்ப காலங்களில் நம் மக்களின் பிரதான தொழில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான்.

    கால்நடை களுக்கு பொதுவாக ஆபத்தை விளைவிக்கும் பாம்புகளும் , கால்நடைகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் புலிகளும் மற்றும் நரிகளும்,மாமிச பட்சினிகளும் அதிகமாக மலை பகுதிகளில் காண ப்படும்.

    இவைகளிடமிருந்து கால்நடைகளை காக்கும் பொருட்டு வீரர்கள் போராடி உள்ளனர். இவ்விதமான போராட்டத்தின் போது வீரர்களோ அல்லது புலியோ இறப்பது உண்டு. இங்கு காணப்படும் சிற்பம் 4 அடி உயரமும், 2 1/2 அடி அகலத்துடன் பலகை கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது. அருகில் காணப்படும் பெண் அவ்வீரனின் மனைவியாக இருக்கலாம். வீரனின் காலடியில் வேட்டை நாய் காணப்படுகின்றது. பாண்டிய நாட்டில் மட்டுமே புலிகுத்தி கல்லில் வேட்டை நாயின் உருவமும் சேர்த்து வடிப்பது வழக்கமாக உள்ளது. மற்ற பகுதிகளில் காணப்படும் புலிக்குத்தி கல்லில் இவ்விதம் வேட்டை நாய் காணபடுவது மிகவும் அபூர்வமாகும். இந்த கல் மிக சேதமடைந்து காணப்ப டுகிறது. இது போன்ற வரலாற்று சின்னங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொரு வரின் கடமையாகும் இவ்வாறு அவர் கூறினார்.

    • செக்கானூரணி அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுக்கப்பட்டது.
    • கால்நடை வளர்ப்புக்கென்று தனியாக ஒரு குழு அமைத்து பாதுகாத்து வந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செக்கா னூரணி அருகிலுள்ள எஸ்.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மதுரை அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் கல் என்பதை கண்டறிந்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    ஆரம்ப காலங்களில் நம் மக்களின் பிரதான தொழில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான்.

    கால்நடை களுக்கு பொதுவாக ஆபத்தை விளைவிக்கும் பாம்புகளும் , கால்நடைகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் புலிகளும் மற்றும் நரிகளும்,மாமிச பட்சினிகளும் அதிகமாக மலை பகுதிகளில் காண ப்படும்.

    இவைகளிடமிருந்து கால்நடைகளை காக்கும் பொருட்டு வீரர்கள் போராடி உள்ளனர். இவ்விதமான போராட்டத்தின் போது வீரர்களோ அல்லது புலியோ இறப்பது உண்டு. இங்கு காணப்படும் சிற்பம் 4 அடி உயரமும், 2 1/2 அடி அகலத்துடன் பலகை கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது. அருகில் காணப்படும் பெண் அவ்வீரனின் மனைவியாக இருக்கலாம். வீரனின் காலடியில் வேட்டை நாய் காணப்படுகின்றது. பாண்டிய நாட்டில் மட்டுமே புலிகுத்தி கல்லில் வேட்டை நாயின் உருவமும் சேர்த்து வடிப்பது வழக்கமாக உள்ளது. மற்ற பகுதிகளில் காணப்படும் புலிக்குத்தி கல்லில் இவ்விதம் வேட்டை நாய் காணபடுவது மிகவும் அபூர்வமாகும். இந்த கல் மிக சேதமடைந்து காணப்ப டுகிறது. இது போன்ற வரலாற்று சின்னங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொரு வரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×