search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50 percent subsidy for"

    • வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும்.
    • தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்புக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையும் வழங்கப்படும்.

    ஈரோடு:

    தொழில் முனைவோர் மத்திய அரசு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக 2021-22-ம் ஆண்டு முதல் தேசிய கால்நடை இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி வேலை வாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காக கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின்படி கோழி வளர்ப்பு, செம்மறி யாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதல் இலக்காகும்.

    கோழி வளர்க்க முனைவோர் 1,000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்வதற்கு மூலதனத்தில் 50 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும்.

    பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையும், தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்புக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையும் வழங்கப்படும்.

    இந்த திட்டத்துக்கு தனி நபர், சுய உதவி குழுவினர், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புபினர், விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கத்தினர் தகுதியா னவர்கள்.

    திட்டத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திட்ட அங்கங்களில் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் https://nlm.udyamimitra.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்கள், ஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×