search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
    X

    கால்நடை சிறப்பு மருத்துவமுகாமை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டனர்.

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

    • மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலங்காடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் மற்றும் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் முகாமை துவக்கி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலங்காடு ஊராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி மற்றும் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் முகாமை துவக்கி வைத்தனர்.

    தொடர்ந்து கால்நடை களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கால்நடை அபிவிருத்தி சிறப்பு அரங்குகளை பார்வையிட்டு கேட்டறிந்தனர்.

    மேலும் கால்நடை வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆலோசனைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் கால்நடை வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சுமதி, ஆவின் பொது மேலாளர் மருத்துவர் ராஜசேகர், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக அதிகாரிகள் குழுவினர் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் வந்து மருத்துவ சிகிச்சை பலன் பெற்றனர்.

    Next Story
    ×