search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதலாக பஸ்கள்"

    • மானாமதுரை வழியாக மதுரை-ராமேசுவரத்துக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இதனால் ஏராளமான பயணிகள் குழந்தைகளுடன் பஸ்நிலை யத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வளர்ந்து வரும் பெரியநகராட்சி ஆகும். மாவட்டத்திலேயே மானாமதுரையில் இரவு பகலாக பஸ் வசதி உள்ளது. அதிகாலை முதல் இரவு வரை நகர பஸ்கள் வசதிகள் உள்ளது.

    தற்போது ராமேசுவரம் வரை ரெயில்கள் செல்லாத தால் மதுரையில் இருந்து வெளிமாநில பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பஸ்சில் செல்கின்ற னர். இதனால் மதுரை-ராமேசுவரம் இடையே உள்ள திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி பகுதி பயணிகளுக்கு போதுமான பஸ்கள் இல்லாமல் அவதிப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்து நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையில் உள்ளது.

    இதில் குறிப்பாக மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் வரும் பஸ்கள் திருப்புவனம், மானாமதுரை பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் ஏராளமான பயணிகள் குழந்தைகளுடன் பஸ்நிலை யத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. மிகபெரிய பஸ்நிலையமாக உள்ள மானாமதுரையில் இருந்து மதுரை வரை நேரடியாக பஸ் வசதி பலவருடமாக கிடையாது.

    தற்போது ராமேசு வரத்தில் இருந்து வரும் பஸ்களும் அதிக அளவில் பயணிகளுடன் வருவதால் மானாமதுரை பயணிகள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணியாளர்கள் காத்திருந்து மதுரை செல்லும் நிலை உள்ளது.

    இதேபோல் காலை 10 மணி வரை மானாமதுரை யில் இருந்து சிவகங்கை செல்லும் பஸ்களிலும் பயணிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.

    கூட்டநெரிசலை தடுக்கும் வகையில் மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை கூடுதல் பஸ்களையும், மானாமதுரை பயணிகளின் நீண்டகால கோரிக்கையான மானாமதுரை-மதுரை இடையே இரவு பகலாக 4 வேளைகளில் நேரடியாக பஸ்வசதியும், இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு நேரடியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானா மதுரை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×