search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குர்பாஸ்"

    • இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • உலகத்தில் உள்ள அனைத்து இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் கோலி ஒரு உத்வேகம் என குர்பாஸ் கூறினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 215 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    வெற்றிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகத்தில் உள்ள அனைத்து இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் கோலி ஒரு உத்வேகம். அதிக ரன்கள் எடுப்பது போன்ற விளையாட்டின் யுக்திகள் பலவற்றை கோலி எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×