search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பையால் சுகாதார சீர்கேடு"

    • காந்தி மார்க்கெட் அருகில் கோட்டைகுளம் ரோடு உள்ளது. இந்தப் பகுதிகளில் காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பை ஆகியவை கொட்டப்படுகிறது.
    • குப்பைகள் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகில் கோட்டைகுளம் ரோடு உள்ளது. இந்தப் பகுதிகளில் காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பை ஆகியவை கொட்டப்படுகிறது. ஆனால் குப்பைகள் அகற்றப்படாததால் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.அது மட்டுமின்றி காந்தி மார்க்கெட்டுக்கு வரக்கூடிய வியாபாரிகள் இந்த இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

    இதேபோல் இந்த குப்பைகளில் பலதரப்பட்ட கழிவுகள் இருப்பதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.ரோட்டோரத்தில் திறந்த வெளியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் காற்றில் பறக்கின்றன.இதேபோல் இரைதேடி வரும் நாய்கள் குப்பைகளை கிளறுவதாலும் ரோட்டில் குப்பைகள் பரவி கிடக்கின்றன.

    இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாலை நேரங்களில் கொசு தொல்லையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.மேலும் காந்தி மார்க்கெட் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் உட்கார்ந்து வியாபாரம் செய்யா ததால்,அந்த இடத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுபாராக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, இங்கு குப்பைகள் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அழுகிய காய்கறிகளால் துர்நாற்றம் வீசுகிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொரப்பாடி டோல்கேட் பகுதியில் உழவர் சந்தை செயல்ப்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் பயிரிடப்படும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    கிராமப்புறங்களில் இயற்கையாக விளைவிக்கப்படும் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதால் ஏராளமானோர் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் உழவர் சந்தையில் போடப்படும் குப்பைகளை, மாநகராட்சி துப்புர பணியாளர்கள் சரிவர அகற்றுவதில்லை என கூறப்படுகிறது. கடமைக்காக வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அங்கு குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்படுகிறது.

    சுமார் 3 நாட்களுக்கு மேல் குப்பைகள் அகற்றாமல் இருப்பதால், அழுகிய காய்கறிகளால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    உழவர் சந்தைக்கு காய்களை வாங்க வரும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.

    எனவே உழவர் சந்தையில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினமும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானல் நகர் பகுதியில் பல மாதங்களாக முறையாக குப்பைகள் அகற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    • குப்பைகள் அதிகம் தேங்குவதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணா ராமசாமி நகர் பகுதியில் பல மாதங்களாக முறையாக குப்பைகள் அகற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இப்பகுதியில் தினசரி குப்பைகள் அகற்றப்படுவதில்லை என்றும் எப்போதாவது வந்து தான் குப்பைகளை அகற்றுகிறார்கள்.

    குப்பைகள் அதிகம் தேங்குவதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளதாகவும், அப்பகுதியை கடக்கும் போது கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×