search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்: காந்தி மார்க்கெட் அருகே தேங்கியுள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு
    X

    மார்க்கெட் அருகே தேங்கியுள்ள குப்பைகளை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல்: காந்தி மார்க்கெட் அருகே தேங்கியுள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு

    • காந்தி மார்க்கெட் அருகில் கோட்டைகுளம் ரோடு உள்ளது. இந்தப் பகுதிகளில் காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பை ஆகியவை கொட்டப்படுகிறது.
    • குப்பைகள் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகில் கோட்டைகுளம் ரோடு உள்ளது. இந்தப் பகுதிகளில் காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பை ஆகியவை கொட்டப்படுகிறது. ஆனால் குப்பைகள் அகற்றப்படாததால் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.அது மட்டுமின்றி காந்தி மார்க்கெட்டுக்கு வரக்கூடிய வியாபாரிகள் இந்த இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

    இதேபோல் இந்த குப்பைகளில் பலதரப்பட்ட கழிவுகள் இருப்பதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.ரோட்டோரத்தில் திறந்த வெளியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் காற்றில் பறக்கின்றன.இதேபோல் இரைதேடி வரும் நாய்கள் குப்பைகளை கிளறுவதாலும் ரோட்டில் குப்பைகள் பரவி கிடக்கின்றன.

    இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாலை நேரங்களில் கொசு தொல்லையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.மேலும் காந்தி மார்க்கெட் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் உட்கார்ந்து வியாபாரம் செய்யா ததால்,அந்த இடத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுபாராக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, இங்கு குப்பைகள் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×