search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழே விழுந்து சாவு"

    • வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது 10 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் ஜீவா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது 10 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மனைவி லீலாவதி ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை பற்றி வருகின்றனர்.

    • தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
    • வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, புலிகரை அருகே வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 28).

    இவர் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மாட்லாம்பட்டி அருகே குப்பங்கரை பகுதியை சேர்ந்த திருத்ரா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் தனது மனைவி அம்மாவிடான குப்பங்கரையில் சில நாட்கள் இருந்து வந்துள்ளார் நேற்று முன்தினம் வேலை முடிந்து மனைவியை பார்க்க வந்து சுபாஷ் சந்திரபோஸ் மாட்லாம்பட்டிக்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு தனது மோட்டார் பைக்கில் மாட்லாம்பட்டி நோக்கி சென்றுள்ளார்.

    அப்பொழுது சாலையில் இருந்த வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார்.

    இதனைக் கண்ட அவ்வழியில் சென்றவர்கள் செல்போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புளியம்பழம் பறித்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிளியாப் பட்டு சேரியந்தல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 44) தொழிலாளி. இவர், நேற்று திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில் உள்ள புளியமரத்தில் ஏறி புளியம்பழம் உலுக்கி கொண்டிருந்தார்.

    அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு ப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×