search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளி கோபுரம்"

    • பாரிஜாத மலரினால் சிகிச்சை செய்தால், கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்று கூறினார்.
    • அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்களை இயற்றினார்.

    ஒரு சமயம் விஜய நகர மன்னர் பிரபு தேவராயர் கண் பார்வை இழந்து துன்பமடைந்தார்.

    மன்னரின் நம்பிக்கைக்குகந்த புலவர் சம்பந்தாண்டான், பாரிஜாத மலரைக் கொண்டு சிகிச்சை செய்தால்,

    கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்றும், இப்பணியை செய்ய வல்லவர் அருணகிரிநாதார்தாம் என்றும் கூறினார்.

    மன்னரும் இதை ஏற்று, அருணகிரிநாதரை பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.

    பாரிஜாத மலர் சொர்க்கத்தில் இருப்பதால் அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாயும் திறமையால்,

    ஒரு இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார்.

    உயிரற்ற தன் உடலை ஓரிடத்தில் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார்.

    ஆனால் மலரைக் கொண்டு வருவதற்குள் புலவர் சம்மந்தாண்டனது சூழ்ச்சியினால் அருணகிரிநாதரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.

    தன் பூத உடல் மீண்டும் திரும்பப் பெற முடியாதோல் அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்களை இயற்றினார்.

    இக்கோபுரத்தின் கலசத்தில் அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

    ×