search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணர் கோவில்"

    • கம்பத்தடி கிருஷ்ணன் கோவில் ஆசியாவிலேயே மிள நீளமானது.
    • நவநீதகிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் குடும்பத்தினர் அனைவருடனும் ஸ்ரீகிருஷ்ணர் உள்ளார். கருவறையில் வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார் உள்ளார். மார்பில் மகாலட்சுமி இருக்கிறார்.

    அவரது வலது பக்கம் அண்ணன் பலராமன், இடது பக்கம் தம்பி சாத்யகி வீற்றிருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அனிருத்தன் ஆகியோரும் ஒருங்கே உள்ளனர்.

    சென்னை கோபாலபுரம்: ஸ்ரீவேணு கோபால சுவாமி கோவில் 1917-ம் வருடம், வேதாரண்யம் அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் சிவாலயத்துக்கு அருகில் பூமியைத் தோண்டும்போது, பூமிக்குள் இருந்து அழகிய ஸ்ரீவேணுகோபால விக்கிரகம் வெளிப்பட்டது.

    அரசாங்க அனுமதியுடன் அதை சென்னைக்கு எடுத்து வந்து, இப்போது கோவில் உள்ள கோபாலபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று தொடங்கி, இன்றளவும் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் வள்ளலென அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால் சுவாமி

    திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அமாவாசையுடன் சேர்ந்த திங்களன்று (அமாவாசை சோமவாரம் என்பார்கள்) இத்தலத்தில் உள்ள அரச மரத்தை வழிபட்டு வர... விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும், பிள்ளை வரம் பெறுவார்கள் என்கின்றனர்.

    வேப்பங்கொண்ட பாளையம்: ஸ்ரீகிருஷ்ணன் கோவில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது வேப்பங்கொண்டபாளையம்.

    ஒருகாலத்தில் வேணுகோபாலபுரம் என அழைக்கப்பட்ட இந்த ஊரின் சாலையோரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகிருஷ்ணன் கோவில்.

    இந்த தலத்தில் நான்கு திருக்கரங்களோடு அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இவரை ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர் என்று போற்றுகின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    மதுரையில் 2 கிருஷ்ணர்கள்:

    ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோவில், கம்பத்தடி கிருஷ்ணன் கோவில். மதுரை தல்லாகுளம் பகுதியில் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. வியாழக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். இதில் கலந்து கொண்டு நவநீதகிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும்.

    படிப்பு, குழந்தை பாக்கியம், குடும்ப நன்மை, திருமண யோகம் என சகல நன்மைகளையும் அள்ளித் தருவார் நவநீதகிருஷ்ணன். இரண்டாவது கிருஷ்ணர் குடியிருப்பது ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள மாசி வீதிகளில் உள்ளது.

    மீனாட்சியம்மன் கோவிலின் வடக்கு கோபுரத்தின் திசையில் உள்ளதால் வடக்கு கிருஷ்ணன் கோவில் என்றும் ஆரம்ப காலத்தில் கம்பத்தின் அடியில் கிருஷ்ணன் வீற்றிருந்ததால், கம்பத்தடி கிருஷ்ணன் கோவில் என்றும் அழைக்கிறார்கள்.

    புத்திரதோஷம் உள்ளவர்கள் இந்த கிருஷ்ணனை மனதார பிரார்த்தித்து, அவருக்கு கொலுசு அணிவிப்பதாகவும், கோவிலில் தொட்டில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது. 9-ம் நாளன்று 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க, முளைப்பாரி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    அன்று ஆசியாவிலேயே மிள நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்த கோவிலின் புதிய பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணர். 15 நாட்கள் கிருஷ்ணா ஜெயந்தி விழா இத்தலத்தில் நடத்தப்படுகிறது.

    காவளம்பாடி:  கோபாலகிருஷ்ணர் கோவில் நாகை மாவட்டத்தில் புகழ் பெற்ற கோபாலகிருஷ்ணர் கோவில் உள்ளது. காவளம் என்றால் பூஞ்சோலை என்று அர்த்தம்.

    பாமாவுடன் சோலையில் வீற்றிருக்க ஆசைப்பட்ட கிருஷ்ணர் அதற்குரிய இடத்தை தேடியபோது இத்தலத்தை தேர்வு செய்து அமர்ந்தாராம். பாமாவுக்கு மிகவும் பிடித்த பூ பாரிஜாதம். அந்த பாரிஜாதம் பூவை இத்தலததில் கிருஷ்ணர் நட்டதாக புராணங்கில் கூறப்பட்டுள்ளது.

    மகாபலிபுரம்: மகாபலிபுரத்தில் உள்ள கோவில்களில் மிகப்பெரிய கிருஷ்ணர் கோவிலாகும். இந்த தலத்தில் உள்ள கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தன் விரலில் தாங்கிப் பிடித்து இருப்பதாக ஐதீகம்.

    இந்த ஆலயம் முழுவதும் கற்சிற்பங்களால் நிறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மகாபலிபுரத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் இந்த கிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்று வந்தால் பொழுதுபோக்கோடு புண்ணியத்தையும் பெற முடியும்.

    பஞ்ச கிருஷ்ண தலங்கள்:

    தமிழ் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கிருஷ்ணர் கோவில்கள் உள்ளன. என்றாலும் 5 கிருஷ்ணர் கோவில்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்ற சிறப்புடன் திகழ்கின்றனர். அந்த 5 கிருஷ்ணர் தலங்கள் விவரம் வருமாறு:-

    1. திருக்கோவிலூர்

    2. திருக்கண்ணபுரம்

    3. திருக்கண்ணங்குடி

    4. திருக்கண்ணமங்கை

    5. கபிஸ்தலம்ஈரோடு மயிலாடி

    • `வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
    • கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு அழகாய் காட்சி தருகிறார்.

    வடசென்னை, முத்தியால் பேட்டையில் இத்திருக்கோயில் பவளக்காரத் தெருவில் உள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். திருமழிசையாழ்வாரின் அபிமான தலம் என்று சொல்லப்படுகிறது.

    மூலவர் - ருக்மிணி பாமா சமேத ஸ்ரீவேணுகோபாலன் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, மிக அழகாய் காட்சி தருகிறார்.

    தனி சன்னிதியில் ராமர், ஸ்ரீனிவாசர், ஆண்டாள், சுதர்சனர், ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்கின்றனர். உற்சவ மூர்த்திகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு.

    திருமழிசையாழ்வார், இங்கு சில காலம் தங்கி, பெருமாளை மங்களாசனம் செய்திருக்கிறாராம். திருமழிசையாழ்வாரின் திருவுருவம், சில பாதுகாப்பு காரணங்களுக்காக சில காலம் இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். இன்றளவும் இத்திருக்கோயிலில் திருமழிசையாழ்வாரின் `வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

    ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள்

    "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்களும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. அலங்காரங்கள் மிக நேர்த்தியாய் செய்யப்பட்டு, உற்சவங்கள் கண்டருளும் பெருமாளைக் காணக் கண் கோடி வேண்டும். ராப்பத்து உற்சவத்தில் ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் மிகவும் அழகு.

    • தென்னிந்தியாவிலேயே இந்த சிலை பெரிய சிலை என கூறப்படுகிறது.
    • கிருஷ்ணர் கோவில் அருகில் கலிகண்ட மகாதேவர் சிவன் கோவில் உள்ளது.

    குமரி மாவட்டம் கருங்கல் உள்ள திப்பிறமலையில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிலை 13 அடி உயரம் கொண்டது.

    தென்னிந்தியாவிலேயே இந்த சிலை பெரிய சிலை என கூறப்படுகிறது. இது தன்னை பெற்றெடுத்த தாய், தந்தையருக்கு கருவில் இருக்கும்போதே விஸ்வரூப காட்சி அளித்த நிலையாகும். எனவே இந்த கோவில் கருமாணித்தாழ்வார் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    கிருஷ்ணர் சிலை முற்காலத்தில் தானாக வளர்ந்ததாகவும், இப்போதுள்ள கோவில் மூன்றாவது தடவையாக பிரித்து கட்டப்பட்டதாகவும், தானாக வளர்ந்து கொண்டிருந்த இந்த சிலையை முற்காலத்தில் பூஜை செய்து வந்த பூசாரி குறைபடுத்தி சிலையின் வளர்ச்சியை நிறுத்தியதாகவும் கதை ஒன்று சொல்கிறது.

    நம்பிக்கையுடன் வேண்டுவோருக்கு வேண்டுதலை நிறைவேற்றி சகல ஐஸ்வரியங்களையும் கிருஷ்ணர் அள்ளி அள்ளி தருவதாக அங்குள்ள பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

    கிருஷ்ணர் கோவில் அருகில் கலிகண்ட மகாதேவர் சிவன் கோவில் உள்ளது. சுயம்புலிங்கமாக காட்சி அளிக்கும் சிவன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இரண்டு கைகளையும் உயர்த்தி அருள்பாலிப்பதாக தேவபிரசன்ன தகவல்கள் கூறுகின்றன.

    சிவனை வழிபட்டு விட்டு இங்குள்ள 9 கிளைகளுடன் கூடிய அரசமரத்தை 9 முறை வலம் வந்தால் 9 கிரக தோஷங்களும் நீங்கி பாவங்களில் இருந்து விடுபடலாம் என சிவனடியார்கள் கூறு கிறார்கள்.

    அடுத்ததாக அங்கு நிற்கும் ஆல மரத்தடியில் வன சாஸ்தாவும் அருள்பாலிக்கிறார். இந்த 3 கோவில்களும் 3100 வருடங்கள் பழமையானவை என கூறப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு செய்யப்படும் பூரண சந்தன காப்பு அலங்காரம் கண்கொள்ளா காட்சி ஆகும். அன்றைய தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ×