search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிஸ்னேஸ்வரர் கோவில்"

    • கிரிஸ்னேஸ்வரர் கோவில் அல்லது குஷ்மேஸ்வரர் கோவில் எனப்படும் கோவில் ஒரு புகழ் பெற்ற இந்துக் கோவில் ஆகும்.
    • தௌலதாபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    கிரிஸ்னேஸ்வரர் கோவில் அல்லது குஷ்மேஸ்வரர் கோவில் எனப்படும் கோவில் ஒரு புகழ் பெற்ற இந்துக் கோவில் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தின் ஒளரங்கபாத்தில் உள்ள தௌலதாபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இக்கோவில், சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் இங்கே திருத்த வேலைகளைச் செய்வித்தார். வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலையும், காயாவில் உள்ள விஷ்ணு பாத கோவிலையும் திரும்பக் கட்டுவித்தவரும் இவரே ஆவார்.

    ×