search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமசபைக் கூட்டம்"

    • 130 கிராம ஊராட்சிகளில் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையி லும் கிராம சபைக் கூட்ட த்தை நடத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.
    • பொது மக்கள் அனைவரும் தங்களது கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளில் பங்கு பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தின நாளான 15-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவ ரால் நடத்தப்பட உள்ளது.

    130 கிராம ஊராட்சிகளில் மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையி லும் கிராம சபைக் கூட்ட த்தை நடத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம் செய்வது பற்றி விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டடம் கட்ட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்து தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரக குடியிறுப்புத் திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கம், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் இதரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    பொது மக்கள் அனைவரும் தங்களது கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளில் பங்கு பெற வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.

    • வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

    முதியோர் உதவித்தொகை 60 நபர்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் அன்பு என்ற மருதை, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, பற்றாளராக இளநிலை உதவியாளர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர். தீர்மானங்களை ஊராட்சி செயலர் முத்துக்குமார் வாசித்தார். இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


    • கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் ஊராட்சித்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • ஊராட்சியில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகைகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பதை விளக்க கோரிக்கை வைத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் ஊராட்சித்தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சாலை வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை மேம்படுத்த கோரிக்கை வைத்தனர்.

    ஊராட்சியில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகைகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பதை விளக்க கோரிக்கை வைத்தனர்.

    நீண்டகாலமாக வில்பட்டியின் பல பகுதிகளில் பட்டா வழங்க தாமதம் ஆவதாகவும் அதை விரைந்து வழங்கவும் வேண்டுகோள் விடுத்தனர். கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் ஒரு சில பெண்களும் தங்கள் பகுதிகளில் அனுமதி இல்லாமல் மதுபானம் விற்கப்படுவதாகவும் பிரதான சாலையில் வைத்து விற்பதால் பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

    எனவே உடனடியாக அதை அகற்ற வேண்டும் என ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். ஊராட்சித் தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளதாகவும் விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.

    ×