search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை"

    • சென்னை கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
    • இந்த மருத்துவமனையை வரும் 15-ம் தேதி ஜனாதிபதி திறந்து வைக்க உள்ளார்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    சுமார் 4.89 ஏக்கர் நிலத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி ஜனாதிபதி தரவுபதி முர்மு இந்த மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில், கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

    வரும் 15-ம் தேதி ஜனாதிபதி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரடி ஆய்வு செய்தார்.

    ×