search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிஃப்ட் சிட்டி"

    • காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியில் மதுபானம் அருந்த அனுமதி.
    • நியமிக்கப்பட்ட பகுதிக்குள் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    குஜராத் அரசு காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள குஜராத் சர்வதேச நிதி டெக்-சிட்டியில் (GIFT City) உள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், கிளப்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

    கிஃப்ட் சிட்டியில் பணிபுரியும் அனைத்து நபர்களும், அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களும் நியமிக்கப்பட்ட பகுதிக்குள் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதேவேளையில் ஓட்டல், ரெஸ்டாரன்ட்கள் மதுபான பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுபானம் அருந்துதல், சாப்பிடுதல் வசதி கொண்ட ஓட்டல், ரெஸ்டாரன்ட் மற்றும் கிளப்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி பெற்ற ஓட்டல், ரெஸ்டாரன்ட் மற்றும் கிளப்கள் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யமுடியும். இங்கு உலகளாவிய வணிக சூழலை வழங்கும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிஃப்ட் சிட்டி இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படுகிறது. மேலும் சர்வதேச நிதிச்சேவை மையமாகவும் கருதப்படுகிறது. அதிக அளவில் ஆரக்கிள், சைரில், பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி பேங்க் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் சிஃப்ட் சிட்டியில் அமைந்துள்ளது.

    ×