search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர் வீரவணக்க நாள்"

    • திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை தாங்கி வீரவணக்கம் செலுத்தினார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    திருப்பூர்:

    இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. காவல்துறை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட பிரிவுகளில் தேசத்தை பாதுகாக்கும் வகையில் வீரமரணம் அடைந்த 254 காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நினைவு தூண் அமைக்கப்பட்டது.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை தாங்கி வீரவணக்கம் செலுத்தினார். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், போலீஸ் துணை கமிஷனர்கள் அபிஷேக் குப்தா (வடக்கு), வனிதா (தெற்கு), ஆசைத்தம்பி (தலைமையிடம்), மநகர கூடுதல் துணை கமிஷனர்கள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர்கள் வானத்தை நோக்கி மூன்று முறை 48 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். வீரவணக்கம் அடைந்த காவலர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
    • பணியின் போது இறந்தவர்கள்

    கரூர் :

    கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. அதில், பணியின்போது இறந்த, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவுத்தூண் முன், காவல் கண்காணிப்பாளர் வதனம், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந் நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

    • திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு எஸ்.பி. சீபாஸ் கல்யாண் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    • தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    திருவள்ளூர்:

    அக்டோபர் 21-ம் நாளை ஆண்டு தோறும் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர். அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிர் நீத்த 264 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு எஸ்.பி. சீபாஸ் கல்யாண் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜேசுராஜ், மீனாட்சி உதவி போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்த சுக்லா துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    ×