என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
- காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
- பணியின் போது இறந்தவர்கள்
கரூர் :
கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. அதில், பணியின்போது இறந்த, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவுத்தூண் முன், காவல் கண்காணிப்பாளர் வதனம், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந் நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story






