திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு எஸ்.பி. சீபாஸ் கல்யாண் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
Published on

திருவள்ளூர்:

அக்டோபர் 21-ம் நாளை ஆண்டு தோறும் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர். அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிர் நீத்த 264 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு எஸ்.பி. சீபாஸ் கல்யாண் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜேசுராஜ், மீனாட்சி உதவி போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்த சுக்லா துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com