search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை பண்ணை"

    • செட்டிநாடு கால்நடை பண்ணையில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் சென்று பார்வையிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் செட்டிநாடு ஊராட்சியில் உள்ள கால்நடைப் பண்ணையில் 150 ஏக்கர் பரப்பளவில், கால்நடைகளுக்கு தேவையான கால்நடை தீவனம் மரங்கள் மற்றும் 600 மாடுகள், 1100 ஆடுகள், 1,258 அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்க்கப்படு கின்றன.

    இதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்நடை கொட்டகைகள், கன்றுக் கொட்டகைகள், பால் கறவைக்கூடம், ஆட்டுக்கொட்டகைகள், கோழிக் கொட்டகைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் சென்று பார்வையிட்டார்.

    மேலும் செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை உருவாக்குதல், தீவன ஆலை அமைத்தல் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் திட்டத்தின்கீழ் 13.81 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.

    பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் செம்மறி ஆடுகள் ஜமுனாபாரி இன வெள்ளா டுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கி டவும், தார்பார்கர், சாகிவால் இன மாடுகளின் பால் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குநர் (கூ.பொ) பாலசுப்பி ரமணியன், கால்நடை உதவி மருத்துவர்கள் நட்ராஜன், பிரபாகரன், விவசாய மேலாளர் இதயத்துல்லா உட்பட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×