search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை உணவு திட்டம்"

    • பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க பள்ளிகளில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கம்மவா ர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் கலெக்டர் காலை உணவை பார்வை யிட்டு ஆய்வு செய்ததோடு, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    மேலும் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேட்டி
    • வேலூர் மாநகராட்சி பகுதியில் 48 பள்ளிகளில் படித்து வரும் 3,250 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் முதல்அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் மூலம் தொடக்கப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழங்கி வருகின்றனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

    சத்துவாச்சாரியில் உள்ள உணவு கூடத்தில் பணியாளர்கள் காலை உணவு தயாரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சித்தேரி, வேலப்பாடி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகள் நேரில் சென்று குழந்தை களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார். காலை உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா சரியான நேரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர், மேயர் சுஜாதா ஆகியோர் குழந்தைகளுக்கு காைல உணவு பரிமாறினர்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    வேலூர் மாநகராட்சி பகுதியில் 48 பள்ளிகளில் படித்து வரும் 3,250 குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மாநகராட்சி பகுதியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு தரமாக உள்ளது. இதனை சாப்பிடும் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பணியாளர்கள் திறம்பட இதில் ஈடுபட்டுள்ளனர். ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் களையப்படும் என்றார்.

    கலெக்டர் ஆய்வின் போது கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    ×