மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்

பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க பள்ளிகளில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கம்மவா ர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் கலெக்டர் காலை உணவை பார்வை யிட்டு ஆய்வு செய்ததோடு, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

மேலும் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com