search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்மல் பள்ளி"

    • சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
    • சமூக நீதிக்காகவும், மனிதர்களின் ஒற்றுமையை மேம்படுத்திடவும் கல்வி உதவுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள கார்மல் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று பள்ளி மைதானத்தில் நடந்தது.

    விழாவிற்கு பள்ளி வளாக பொருளாளர் குமார் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜேசு நேசம் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் மரியா பாஸ்டின் துரை ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குழந்தைகளின் திறமை களை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளது. நான் (அப்பாவு) நெல்லை மாவட் டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினேன் ஆசிரியர் பணி என்பது ஒரு தன்னலமற்ற பணியாகும்.

    திறன் மிக்க மனிதர்கள், பல அறிஞர்கள், தலைவர்களையும் உருவாக்கியது பள்ளிகள் தான்.

    கேரளாவுடன் குமரி இணைந்திருந்தபோது, கல்வி உரிமை மறுக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ்கிறது. குமரி மாவட்டத்தில் முதன் முதலில் கல்வியை கொண்டு வந்த பெருமை பங்குதந்தைகளை சேரும். அதாவது 1806-ம் ஆண்டு குமரி மாவட்டம் மயிலாடியில் பங்குதந்தைகளால் முதன் முதலில் பள்ளி கொண்டு வரப்பட்டது.

    தி.மு.க.எப்போதும் மக்களின் நலனுக்காக பாடுபடும் கட்சி. மாணவர்களின் கல்வி, விவசாயிகள், சிறுபான்மையினர், மாநிலத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கி வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சி, சமூக நீதியை தி.மு.க. அரசு இரு கண்களாக கொண்டு ஆட்சி செய்து வருகிறது.

    சாதி, மதம் கொண்டு அரசியல்செய்யும் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது தி.மு.க. அரசு. சமூக நீதிக்காகவும், மனிதர்களின் ஒற்றுமையை மேம்படுத்திடவும் கல்வி உதவுகிறது.

    'இந்த கல்வியை வியாபாரமாக சிலர் செய்வது வேதனை அளிக்கிறது. அய்யா வைகுண்டர் குமரி மாவட்டத்தில் சாதி வேற்றுமையை ஒழித்தார். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தமிழக மக்கள்.

    சாதி, மதம் வைத்து அரசியல்செய்ய நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிக என்ஜினீயரிங் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது தி.மு.க. அரசு தான். காமராஜரை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து பள்ளிகளில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, பள்ளி தாளாளர் ஜெரோம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, வடக்கு பகுதி தி.மு.க. செயலாளரும், 16-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜவஹர், தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் லீனஸ்ராஜ், 33-வது வார்டு வட்ட செயலாளர் அமலராஜா, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி மரிய ஜான் கென்னடி, வக்கீல் பாபா, சீலன்ஸ் பல் மருத்துவமனை டாக்டர் பிராங்கிளின் ஜெயசீலன், சிவா மருத்துவமனை சிவக்குமார் மற்றும் ஆனந்த ஜெபஸ்டிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும்.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்மல் அறிவியல் கழகம் செய்திருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளரும் இல்ல அதிபருமான ஜெரோம் ஆசி வழங்கினார்.

    முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெரோம் சேவியர் விழாவில் பங்கேற்று பேசுகையில், அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும். மாணவர்கள் படிக்கும் பருவத்திலேயே படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    தலைமை ஆசிரியர் மரிய பாஸ்டின், உதவி தலைமை ஆசிரியர் ஜேசு நேசம், கூடுதல் உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெரோம், ஜான் உபால்டு, அமல்ராஜ், ஆசிரியர் அலுவலகச் செய லர் பபிலன், அறிவியல் கழகத் தலைவர் பாபு சைமன் ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பினுமோன், டைட்டஸ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மாணவர்களுடைய அறிவியல் படைப்புகளை வெளிப்படுத்தக்கூடிய கண்காட்சியை ஜெரோம் சேவியர் தொடங்கி வைக்க, திருச்சிலுவைக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் செபஸ்டின் அம்மாள், லெஸ்லி பாத்திமா, ஜெரோம் கல்லூரி பேராசிரியர் ரதி ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்மல் அறிவியல் கழகம் செய்திருந்தது.

    ×