search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் லீஸ்"

    • அதிகபட்சம் 60 மாதங்கள் வரை கார் லீஸ் எடுக்கலாம்.
    • தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் புதிய திட்டம் அறிமுகம்.

    கியா இந்தியா நிறுவனம் புதிதாக கார் லீஸ் எடுக்கும் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லீஸ் திட்டத்தின் கீழ் பயனர்கள் ஏராளமான பலன்களை பெற முடியும். இந்த திட்டத்தில் இணையும் பயனர்கள் புதிய கார் வாங்கும் போது மேற்கொள்ள வேண்டிய பதிவு முறை, பராமரிப்பு மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளில் தலையிட வேண்டிய அவசியம் இருக்காது.

    மாறாக, இவை அனைத்தையும் கியா பார்த்துக் கொள்ளும். பயனர்கள் மிகப் பெரிய தொகையை முன்பணமாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. லீஸ் எடுக்கும் போது அனைத்து கட்டணங்களும் சேர்க்கப்பட்டு விடும். லீஸ் எடுக்கும் திட்டத்தில் பயனர்கள் குறைந்தபட்சம் 24 மாதங்களில் துவங்கி அதிகபட்சம் 60 மாதங்கள் வரை கார் லீஸ் எடுக்கலாம்.

     


    பயனர்கள் லீஸ் எடுக்கும் காலம் நிறைவுபெற்றதும் கியா கார்களில் வேறொரு மாடலை வாங்கிக் கொள்ள முடியும். இதனால் கார் வாங்கும் போது ஏற்படும் மறுவிற்பனை மதிப்பு இழப்பு பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

    லீஸ் திட்டத்தின் கீழ் கியா நிறுவனத்தின் சொனெட், செல்டோஸ் எஸ்.யு.வி. மாடல்களையும் கரென்ஸ் எம்.பி.வி. மாடலையும் வழங்குகிறது. லீஸ் திட்டத்தில் கார்களின் வாடகை மாதம் ரூ. 21 ஆயிரத்து 900 என துவங்கி அதிகபட்சம் ரூ. 28 ஆயிரத்து 800 வரை வசூலிக்கப்படுகிறது.

    முதற்கட்டமாக கார்களை லீஸ் எடுக்கும் திட்டம் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், பூனே, மும்பை மற்றும் டெல்லி என்.சி.ஆர். போன்ற நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ×