search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடிகள்"

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • பாரம்பரியத்தை வலியுறுத்தும் ஜல்லிக்கட்டு சிலை ஆகியவை அங்கு நிறுவப்பட்டு வருகிறது.

    குனியமுத்தூர்,

    கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் குறிச்சி குளக்கரையில் அழகான நடைபாதை, வண்ணமயமான விளக்குகள், நமது பாரம்பரியத்தை வலியுறுத்தும் ஜல்லிக்கட்டு சிலை ஆகியவை அங்கு நிறுவப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் மாலை வேளையில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

    பொதுமக்களை தவிர காதல் ஜோடியினரும் அதிகளவில் குளக்கரையில் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் காதல் ஜோடியினர் மக்களை போன்று சுற்றி பார்த்து விட்டு சென்றால் பரவாயில்லை.

    ஆனால் அவர்கள் தங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்ற நோக்கத்தில் சில காதல் ஜோடியினர் குளக்கரைகளில் அமர்ந்து சில்மிச சேட்டைகளிலும், அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இது அங்கு குடும்பத்தோடு சுற்றி பார்க்க வரும் மக்களுக்கு முகம் சுளிக்கும்படியாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    மக்கள் பொழுதை போக்குவதற்காக குறிச்சி குளக்கரைக்கு வருகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் குளத்தை சுற்றி பார்த்து, அங்கு ஸ்மார்ட் சிட்டியின் மூலம் அழகுப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.

    அப்படிப்பட்ட இந்த இடத்தில் தினந்ேதாறும் ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்து வருகிறார்கள். அப்படி குவியும் காதல் ஜோடியினர் நடைபாதையில் அமர்ந்து கொள்கின்றனர். இதிலும் சில காதல் ஜோடியினர் நடைபாதையில் அமர்ந்து கொண்டு சில்மிஷ சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.

    இவர்களை பிடித்து விசாரித்தால், அவர்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிகிறது. மாநகருக்குள் இருந்து இங்கு வந்து இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடுகிறார்கள். இது கண்டனத்திற்குரியாதாகும்.

    எனவே இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ரோந்து பணியில் ஈடுபட்டு இந்த மாதிரியான நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். அத்து மீறி செயல்படும் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிச்சி குளக்கரை நவீன மயமாக்கப்படும் வேலை இன்னும் முடியவில்லை. அது 100 சதவீதம் முடிந்தால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இங்கு தான் வருவார்கள். அதுபோன்ற நேரத்தில் காதல் ஜோடிகள் இதுபோன்று செயல்பட்டால் குடும்பத்தோடு வருபவர்களுக்கு தர்ம சங்கடமாக இருக்கும். எனவே இங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×