search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காக்கா"

    பாரதீய ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
    மதுரை

    மதுரையில் முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மதுரையில் மாநகராட்சி நிர்வாகம் மிகுந்த பின்னடைவை சந்தித்துள்ளது தற்போது புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர் மாநகராட்சியில் துறை ரீதியாக வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேயர் என்பவர் மதிப்பிற்குரியவர். வணக்கத்திற்குரியவர். அவரது பணியில் வேறு யாரும் தலையிட அனுமதிக்க கூடாது. ஆனால் வேறு எந்த மாநகராட்சியிலும் இல்லாத ஒரு நடைமுறை மதுரை மாநகராட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேயரை ஆட்டிப்படைக்க ஒரு சூப்பர்மேயர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    இதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மேயருக்கு சில விவரங்கள் தெரிய வில்லை என்றால் கவுன்சில் குழு தலைவர் இருக்கிறார் மாநகராட்சி ஆணையாளர் இருக்கிறார். அவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் அதை விட்டுவிட்டு அவரது அதிகாரத்தை இன்னொருவர் பறிக்க கூடாது.

    அ.தி.மு.க. என்றும் தமிழக மக்களுக்காக சேவை செய்கின்ற இயக்கமாகும் தமிழகத்தைப் பொருத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான இயக்கம். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இளைஞராக இருக்கிறார்.அவரும் அவரது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு வகைகளில் அரசியல் செய்கிறார்.

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக அ.தி.மு.க. செய்து வருகிறது. அ.தி.மு.க. தலைவர்கள் தி.மு.க. வினரின் ஊழல்களை அவ்வப்போது வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள். அதனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை நாங்கள் தி.மு.க.வினரின் ஊழலை அமைதியான முறையில் தெரிவித்து வருகிறோம். அண்ணாமலை ஸ்பெஷல் டீ போல கூறி வருகிறார். 

    அ.தி.மு.க. எப்போதும் மக்கள் விரும்பும் இயக்கமாகும் ஆனால் பாரதிய ஜனதா நிகழ்ச்சிகளில் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது. இரை எங்கே  இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்காய்கள் கூடுவது வழக்கம் தான். இரை தீர்ந்த பின் அவை பறந்து விடும்.காலை நாகூரில் அதிகளவில் புறாக்கள் இருக்கும். சிறிது நேரத்தில் அந்தப் புறாக்கள் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும்.அதுபோலதான் சில கட்சிகளுக்கு மக்கள் கூட்டம் கூடுகிறது.

    அ.தி.மு.க.வின் கருத்தாக 21 ஆண்டுகள் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தமுறையில் ஒரு கருத்தை தெரிவிக்கிறேன். அ.தி.மு.க. கடந்த 2014, 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு உள்ளது அது போல வருகின்ற தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நின்று தேர்தலை சந்திக்கட்டும் அதிமுகவும் தனித்து நின்று தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது இதனை சவாலாகவே கூறுகிறேன்.

    பிரதமர் மோடி சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். ஒரு திறமையான பிரதமரை நாடு பெற்றுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து சாதனை படைத்துள்ளார் நரேந்திர மோடி. ஆனால் தமிழக அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. 
    பக்கத்து மாநிலங்களில் கூட வரியை குறைத்து விட்டது ஆனால் திராவிட மாடல் பற்றி பேசும் தி.மு.க. அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுத்து வருகிறது. அதுபோல தேர்தல் வாக்குறுதிகளை எதையுமே என்னும் நிறைவேற்றவில்லை.இதனால் தமிழக மக்கள் தி.மு.க. அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 

    கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முதலமைச்சர் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளதாக வஞ்சப் புகழ்ச்சியாக கூறியுள்ளார். அவர் இருக்கின்ற கூட்டு றவுத்துறை அவர் விரும்பாத துறையாக இருக்கிறது.

    ஆளும் கட்சியாக அதிமுக இருந்தபோது கூட தொண்டர்களுக்கு இல்லாத உற்சாகம் இப்போது ஏற்பட்டுள்ளது .
    இவ்வாறு அவர் கூறினார்.
    ×