search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம் பலி"

    • ராஜி, சங்கர் ஆகிய இருவரும் சிகிச்சைக்கு பயந்து ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர்.
    • தப்பி ஓடிய 2 பேரையும் செங்கல்பட்டு டவுன் போலீசார் தேடிவருகிறார்கள்.

    மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்ன தம்பி அவரது மாமியார் வசந்தா ஆகியோர் விஷசாராயம் குடித்ததில் நேற்று முன் தினம் பரிதாபமாக இறந்தனர். சின்னத் தம்பியின் மனைவி அஞ்சலி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதேபோல் சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியம்பன் (65) , அவரது மனைவி சந்திரா (55) ஆகியோரும் விஷசாராயம் குடித்ததில் நேற்று இறந்தனர். இன்று காலை பெருங்கரணை பகுதியை சேர்ந்த முத்து (55) என்பவரும் விஷசாராயத்துக்கு பலியானார்.

    இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் விஷசாராயம் குடித்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செம்பு,ராஜி(32), பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த மாரியப்பன், சங்கர் (48) ஆகியோரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சைபெற்று வந்த ராஜி, சங்கர் ஆகிய இருவரும் சிகிச்சைக்கு பயந்து ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர். இதனால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தப்பி சென்றவர்களுக்கு விஷசாராயத்தின் பாதிப்பு லேசாக இருந்ததாக தெரிகிறது. எனினும் அவர்களை பிடித்து சிகிச்சை அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். தப்பி ஓடிய 2 பேரையும் செங்கல்பட்டு டவுன் போலீசார் தேடிவருகிறார்கள்.

    • கோத்தகிரி போலீசாருக்கு செம்மனாரை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரவேணு:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் இறந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கள்ளச்சாராயம் விற்பனையை கண்காணித்து வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் அறிவுறுத்தலின்படி குன்னூர் டி.எஸ்.பி கோவிந்தசாமி தலைமையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக கண்காணிப்பு பணி நடந்தது.

    அப்போது கோத்தகிரி போலீசாருக்கு செம்மனாரை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான் கான், யாதவ் கிருஷ்ணன், தலைமை போலீஸ் அஜித், போலீசார்கள் சரவணன், சுரேந்தர் அடங்கிய குழு செம்மனாரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் செம்மனாரை பகுதியில் வசித்து வரும் பெருமாள் (வயது45), பாலன் (71) ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பிளாஸ்டிக் கேனில் வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விஷ சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் திரண்டனர்.
    • விஷ சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் விஷ சாராயம் குடித்து பலியானார்கள். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பத்தில் பதட்டம் நிலவிவருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    எக்கியார் குப்பம் பகுதியில் விஷ சாராயம் விற்பனையை தடுக்கக்கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு, மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் காத்து நின்றது.

    கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

    விழுப்புரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயத்தை குடித்ததால் 10 பேர் இறந்துள்ளனர். அவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து இருப்பதாக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் கூறினார். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளது, மேலும் வேறு குற்றவாளிகள் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
    • கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவகிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள். மேலும் 7 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பத்தில் பதட்டம் நிலவிவருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர். எக்கியார் குப்பத்தில் உள்ள பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர்மல்க மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் காத்து நின்றது.

    கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
    • கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவகிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள். மேலும் 7 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பத்தில் பதட்டம் நிலவிவருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர். எக்கியார் குப்பத்தில் உள்ள பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர்மல்க மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் காத்து நின்றது.

    கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.

    • போலீஸ் வாகனத்திலேயே மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விஷ சாராயத்தை குடித்துவிட்டு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த சங்கர் (வயது 50). தரணிவேல் (50). மண்ணாங்கட்டி (47). சந்திரன் (65). சுரேஷ் (65). மண்ணாங்கட்டி (55) ஆகியோர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர்.

    சாராயம் குடித்துவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்ற இந்த 6 பேரும் மயங்கி விழுந்தனர். இவர்களை மீட்ட உறவினர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதையடுத்து எக்கியர்குப்பம் மீனவ கிராமத்திற்கு மரக்காணம் போலீசார் விரைந்தனர். அப்போது கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு மயக்க நிலையில் வாந்தி எடுத்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகைவாசன், ரமேஷ், ராஜமூர்த்தி ஆகிய 5 பேரை மீட்ட போலீசார், போலீஸ் வாகனத்திலேயே மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த விழுப்புரம் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் உடல்நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தரணிவேல் ஆகியோர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மீதமுள்ள 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், இன்று காலை டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் எக்கியார்குப்பம் கிராமத்திற்கு விரைந்தனர். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர். மாவட்டம் முழுவதுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு எக்கியார்குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எக்கியர்குப்பம் மீனவர் பகுதிக்கு வந்து கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

    விசாரணையில் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமரன் (25) என்பவர் புதுவை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்றதும், இதனை வாங்கி எக்கியார்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த பலர் நேற்று மாலை குடித்ததும் தெரியவந்தது..

    மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன் அமரன் விற்ற கள்ள சாராயத்தை குடித்துவிட்டு எக்கியார்குப்பம் மீனவ பகுதியை சேர்ந்த சுப்புராயன் வயது (60) என்பவரும் இறந்து விட்டதாக கிராம மக்கள் கூறினர்.

    கடந்த காலங்களில் மது விலக்கு பிரிவு மரக்காணம் பகுதியில் இயங்கி வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பிரிவு வானூருக்கு மாற்றப்பட்டது. அதுமுதல் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும் பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் கூறினார்கள்.

    இதனைத் தொடர்ந்து மரக்காணம் போலீசார் விரைந்து சென்று அமரனை கைது செய்தனர். மேலும், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வரும் 10-க்கும் மேற்பட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஷ சாராயத்தை குடித்துவிட்டு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×