என் மலர்
நீங்கள் தேடியது "spurious liquor"
பீகாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளக்சாராயம் குடித்து 25க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டாக அமலில் உள்ளது. மது விலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது அரங்கேறி வருகிறது.
போதை அதிகமாக சாராயத்தில் ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் சாராயம் கள்ளச்சாராயமாகி அப்பாவி மக்களின் உயிரை குடித்துவிடுகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரின் கண்டி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படியுங்கள்...மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 788 பேருக்கு கொரோனா
உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பராங்கி மாவட்டத்தில் ராணிகஞ்ச் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று இரவு ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர்.
அவர்களில் பலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் ராம்நகர் சமூக சுகாதார மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.

ஒடிசா மாநிலம் பாத்ராக் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்த 7 பேர் உயிரிழந்தனர். 43 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #spuriousliquor
ஒடிசா மாநிலம் பாத்ராக் மாவட்டத்தில் உள்ளது பாரிகாட் கிராமம். இந்த கிராமத்தின் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்த 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 43 பேர் ஆபத்தான நிலையில் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திங்கள் அன்று தேர்தல் முடிந்ததும் அரசியல் கட்சியின் சார்பில் விருந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். #spuriousliquor

அசாம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #SpuriousLiquor
திஷ்பூர் :
அசாம் மாநிலம், கோலகாட் மாவட்டத்தில் உள்ள போர்பதார் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 48 மணி நேரத்தில் ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் தயாரித்தவர்கள் யார் ? அது எங்கு தயாரிக்கப்பட்டது ? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர். #SpuriousLiquor